மாற்கு 14 : 26 – 36
26. அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.
27. அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும், என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.
28. ஆகிலும் நான் உயிர்த்தெழுந்தபின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார்.
29. அதற்குப் பேதுரு: உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் இடறலடையேன் என்றான்.
30. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்குமுன்னே, நீ மூன்றுதரம் என்னை மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
31. அதற்கு அவன்: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொன்னான்; எல்லாரும் அப்படியே சொன்னார்கள்.
32. பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: நான் ஜெபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;
33. பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.
34. அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி,
35. சற்று அப்புறம்போய், தரையிலே விழுந்து, அந்த வேளை தம்மைவிட்டு நீங்கிப்போகக்கூடுமானால் அது நீங்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டு:
36. அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார்.
என்னால் முடியும், நான் இதைச் செய்வேன், அதைச் செய்வேன்’ என்று பெருமைப பாராட்டுகிற கிறிஸ்தவர்கள் அநேகர் இருக்கிறார்கள். அவர்கள் பேதுருவைப் போல பேசுகிறவர்கள், சுய நம்பிக்கையில் மேன்மை பாராட்டுகிறவர்கள். ஆனால் ஆவிக்குரிய மதியீனர்கள். இவர்களில் பல விதங்கள் உண்டு. இங்கு பேதுருவைப் போல மற்றவர்களை ஒப்பிட்டு, தன்னை உயர்வய் உயர்த்திக்கொள்வார்கள், பேசுவார்கள். மற்றவர்களைக்காட்டிலும் நான் நல்லவன், நான் மற்றவர்களைப்போல அல்ல என்பார்கள். மற்றவர்களோடு ஒப்பிட்டு தேவன் நம்மைப் பார்ப்பதில்லை. நம்மைத் தனித்தனியே பார்க்கிறார். நம்மோடு தனித்தனியாய் செயல்படுகிறார், இடைபடுகிறார். மற்றவர்களோடு ஒப்பிட்டு உன்னை மேலானவனாக எண்ணிக்கொள்வது ஒரு போதும் உனக்கு பிரயோஜனப்படாது. அது உனக்கு தீமையையே விளைவிக்கும். தவறை உணரக்கூடியவனாய் உன் இருதயத்தைக் கடினப்படுத்தும். இது பெருமை, மேட்டிமையான சிந்தை. பெருமை, மேட்டிமை தேவனை விட்டு நம்மை விலக்குகிறது.
ஆண்டவராகிய இயேசு இவ்விதமான மக்களைக் குறித்து “அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்கள் அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார். (லூக் 18 : 3). இவ்விதமான மக்கள் தேவ நீதிக்குக் கீழ்படியாதவர்கள் (ரோமர் 10 :3) மேலும் இவர்கள் தேவ நீதியை அறியாதவர்கள் என்று இவ்வசனத்தில் பார்க்கிறோம்.
ஒரு கிறிஸ்தவன் எப்போதும் தன் நீதியை வெறுத்து கிறிஸ்துவின் நீதியையே தேடுகிறவனாய் இருப்பான். அவன் எப்போதும் ‘நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள் போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது.’ (ஏசா 64 : 6). என்று சொல்லக்கூடியவனாகவும் நான் இப்பொழுதோ கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன் (கலா 2 : 20) என்று சொல்லக்கூடியவனாகவுமே இருப்பான்.
free books for download
Sermon Download
Reformed Baptist Church - website
You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.