தேவனுடைய வார்த்தையின் வல்லமை

 

   தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். “தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்; வல்லமை தேவனுடையது என்பதே” (சங்கீதம் 62:11). தேவனுடைய வல்லமையை நாம் எங்கு காணமுடியும்? ஆம் நிச்சயமாக தேவன் அருளிய வேதத்தில்தான் காணமுடியும். தேவனுடைய வல்லமையை நாம் பார்க்கவேண்டுமானால் கர்த்தருடைய வேதத்தின் பக்கமாகதான் நாம் திரும்ப வேண்டும். இன்றைக்கு அநேகர் வல்லமைக்காக ஜெபிக்கிறார்கள். ஆனால் வல்லமையின் ஊற்றான வேதத்தின் பக்கம் திரும்ப மறுக்கிறார்கள். நம்முடைய சபையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தேவனுடைய வல்லமையைக் காணவேண்டுமானால் தேவனுடைய வார்த்தையின் பக்கமாக நாம் திரும்ப வேண்டும்.  தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். “தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்; வல்லமை தேவனுடையது என்பதே” (சங்கீதம் 62:11). தேவனுடைய வல்லமையை நாம் எங்கு காணமுடியும்? ஆம் நிச்சயமாக தேவன் அருளிய வேதத்தில்தான் காணமுடியும். தேவனுடைய வல்லமையை நாம் பார்க்கவேண்டுமானால் கர்த்தருடைய வேதத்தின் பக்கமாகதான் நாம் திரும்ப வேண்டும். இன்றைக்கு அநேகர் வல்லமைக்காக ஜெபிக்கிறார்கள். ஆனால் வல்லமையின் ஊற்றான வேதத்தின் பக்கம் திரும்ப மறுக்கிறார்கள். நம்முடைய சபையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தேவனுடைய வல்லமையைக் காணவேண்டுமானால் தேவனுடைய வார்த்தையின் பக்கமாக நாம் திரும்ப வேண்டும்.

  “விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்;” (லூக்கா 8:5) ஊழியர்கள் எல்லோரும் யாரென்று வேதம் சொல்லுகிறதென்றால் விதை விதைப்பவர்கள். அந்த விதை தேவனுடைய வசனம் (லூக்கா 8:11). ஆகவே ஒவ்வொரு ஊழியனும் வேத வசனத்தை விதைக்கும் படியாகவே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களையோ, விருப்பங்களையோ, சிந்தனைகளையோ விதைக்கும் படியாக வேதம் அனுமதிக்கவில்லை. ஆகவே வேத வசனங்களை ஒரு ஊழியக்காரன் அறிந்திருப்பதும் அதை உபயோகப்படுத்துவதும் எவ்வளவு முக்கியமான காரியம் என்பதை நாம் அறிந்து கொள்வது மிக அவசியம். வேதம் எவ்வளவு வல்லைமையானது என்று எரேமியா புத்தகத்தில் ஆண்டவர் குறிப்பிடுக்கிறார். “என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 23:29). வேதத்தில் கர்த்தர் சொல்லுகிறார் என்று பதிவு செய்துள்ளது. ஆனால் இன்றைக்கு கர்த்தர் சொல்லுகிறார் என்பது மாறிப்போய் நான் சொல்கிறேன் என்ற நிலைப்பாட்டில் பிரசங்கங்களும், போதனைகளும் மாறிவிட்டது. 

 

தேவனுடைய வார்த்தையின் வல்லமை (Download PDF)