நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை நாம் எப்படி நடத்துகிறோம்?

“உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும்,

நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?” (1கொரி 6:19).

நித்தியமான, மாறாத பரிசுத்த ஆவியானவர் ஒரு விசுவாசிக்குள் தங்கியிருப்பதின் உன்னதமான சிலாக்கியத்தை எவரும் முழுமையாக விளங்கிக்கொள்ள முடியாது. அநுதினமும் நாம் சந்திக்கும் பலவிதமான சந்தோஷங்கள், துக்கங்கள், சோதனைகள், பாடுகள் போன்ற அனைத்தும் பலவிதமான விளைவுகளை நம்மில் ஏற்படுத்துகிறது. பல சமயங்களில், பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருக்கிறார் என்றும் நம்முடைய எண்ணங்களினால் மற்றும் செயல்களினால் அவர் சந்தோஷமோ அல்லது துக்கமோ அடைகிறார் என்றும் நாம் உணருவதில்லை. அவர் எப்பொழுதும் நமக்குள் இருக்கிறார் என்று நாம் அறியாமலேயே, பலவிதமான தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.