லூக்கா 16: 1 - 10
1. பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.
2. அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான்.
3. அப்பொழுது உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் உக்கிராண விசாரிப்பிலிருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே; கொத்துகிறதற்கு எனக்குப் பெலனில்லை, இரக்கவும் வெட்கப்படுகிறேன்.
4. உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு;
5. தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான்.
6. அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான்.
7. பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான்.
8. அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.
9. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.
10. கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.
இதற்கு முந்திய பிந்திய வசனங்களைப் பார்க்கும்போது இது எந்தவிதமான கொந்தளிப்பு என்பதை விளங்கிக் கொள்ளமுடியும். இது சாதாரண கொந்தளிப்பல்ல. கடலின் கொந்தளிப்பு. இந்த உலகில் கடலின் கொந்தளிப்பை யார் அடக்கமுடியும்? அன்பானவர்களே! நமது வாழ்க்கையிலும் கடலின் கொந்தளிப்பைப் போன்றவைகள் எழும்பலாம். யாராலும் அடக்கக்கூடாததைப் போல காணப்படுகின்ற காரியங்கள் வரலாம். வாழ்க்கை பிரயானத்தில் இவ்விதமான வேளைகள் ஏற்படலாம். ஆனால் நாம் எவ்விதம் இந்த கொந்தளிப்புகளை கடந்து செல்வது? நாம் கொந்தளிப்பை அடக்குகிறவரிடத்தில் செல்லவேண்டும். அவரே அந்த கொந்தளிப்பை அடக்குவார். அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும். காற்றும் கடலும் இவருக்கு கீழ்படிகிறதே என்று அறியத்தக்கதாக அதை நம்முடைய வார்த்தையினால் அடக்கியவர் அவர். அவரிடத்தில் நாம் கொந்தளிப்பை எடுத்துச்செல்லும்போது அவர் அதை எப்படி அமர்த்தவேண்டுமோ அவ்விதம் செய்வார்.
அடுத்த வசனத்தை வாசித்துப்பாருங்கள். ‘அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தாஷப்படுகிறார்கள். தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக்கொண்டு வந்து சேர்க்கிறார். (சங்கீதம் 107 : 3) கொந்தளிப்பு அடங்கி அமைதலுண்டானது என்று பார்க்கிறோம். உங்கள் வாழ்க்கையின் கொந்தளிப்பு எவ்வளவு கொடியதாக இருந்தாலும் அமைதலுண்டாகும். தேவன் எல்லா கொந்தளிப்பையும் அமர்த்துவார். மேலும் அவர்கள் இந்தக் கொந்தளிப்பில் அமிழ்ந்துவிட்டார்கள் என்று சொல்லப்படவில்லை. அவர்கள் பத்திரமாக துறைமுகத்தை வந்தடந்தார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதை செய்தவர் யார்? ‘தேவனே’ நீங்கள் உங்கள் சொந்த அறிவினால் இதைக் கடந்து செல்லமுடியாது ஆனால் தேவன் அவ்விதம் செய்வார். துறைமுகத்தில் அவர்களைக் கொண்டு வந்து சேர்க்கிறார்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.
free books for download
Sermon Download
Reformed Baptist Church - website
You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.