இந்த கட்டுரையில், பைபிளில் உள்ள சில அறிவியல் உண்மைகளைப் பார்ப்போம். பைபிள் ஒரு அறிவியல் பாடப் புத்தகம் இல்லையென்றாலும், அறிவியல் உண்மைகளுக்கு வரும்போது பைபிளில் தவறு இல்லை . பைபிளில் அநேக அறிவியல் உண்மைகள் உள்ளன அவற்றை நாம் பார்ப்போம். 

1. பூமி ஆகாயத்தில் தொங்கி கொண்டிருக்கிறது

பூமி ஆகாயத்து விண்வெளியில் மிதக்கிறது அதாவது தொங்கி கொண்டிருக்கிறது என்று பைபிள் கூறுகிறது . பூமி ஒரு பெரிய மிருகத்தின் மீது அமர்ந்திருப்பதாக பண்டைய காலங்களில் சிலர் நினைத்தார்கள். பூமி மிதக்கிறது என்று நாம் அறிவியல் மூலமாக அறிவோம்.

அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.  –  யோபு  26 : 7

யோபு எப்போது எழுதப்பட்டது தெரியுமா ? 3500 ஆண்டுகள் முன்பு எழுதப்பட்டது.

2. பூமி வட்டமானது அல்லது கோளமானது.

பூமி உருண்டையானது என்று பைபிள் நமக்குத் தெளிவாக தெரிவிக்கிறது. பூமி தட்டையானது என்று ஒரு காலத்தில் பொதுவாக நம்பப்பட்டது , கிறிஸ்டோபர் கொலம்பஸ் உலகம் முழுவதும் பயணம் செய்ய தூண்டியது வேதமே .

அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார். –  ஏசாயா 40 : 22 

3. ஆற்றல் பாதுகாப்பு சட்டம்

ஆற்றல் பாதுகாப்பு சட்டம் என்ன கூறுகிறது ? ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அமைப்பின் மொத்த ஆற்றல் காலப்போக்கில் மாறாமல் இருக்கும் என்று ஆற்றல் பாதுகாப்பு கொள்கை கூறுகிறது. இதன் பொருள் ஆற்றலை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது, ஆனால் ஒரு ஆற்றலில் இருந்து மற்றொரு வடிவத்திற்கு மட்டுமே மாற்ற முடியும்.

இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன.”  – ஆதியாகமம் 2 : 1

உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன என்பது மூல பாஷையில் முற்று பெற்றது என்பதை குறிக்கிறது. உலகில் இனிமேல் ஆற்றலை உருவாக்கவோ அழிக்கவோ முடியவே முடியாது.

4.நீரியல் சுழற்சி

ஆறுகள் கோடிக்கணக்கான லிட்டார்கள் தண்ணீர் கடலுக்கு கொட்டுகிறது . அது எங்கே செல்கிறது தெரியுமா ? அது 17 ஆம் நூற்றாண்டு காலமே கண்டுபிடிக்கப்பட்டது . ஆனால் , பரிசுத்த வேதாகமத்தில் இதை பற்றி படிக்கிறோம்

ஆறுகள் கோடிக்கணக்கான லிட்டார்கள் தண்ணீர் கடலுக்கு கொட்டுகிறது . அது எங்கே செல்கிறது தெரியுமா ? அது 17 ஆம் நூற்றாண்டு காலமே கண்டுபிடிக்கப்பட்டது . ஆனால் , பரிசுத்த வேதாகமத்தில் இதை பற்றி படிக்கிறோம்

  “ எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும். “ – பிரசங்கி  1 : 7

 “ அவர் வானத்தில் தமது மேலறைகளைக் கட்டி, பூமியில் தமது கீழறைகளை அஸ்திபாரப்படுத்தி, சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியினுடைய விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம். “ – ஆமோஸ் 9:6

 “அவர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.” – சங்கீதம் 135 : 7 

மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின்மேல் பொழியும்; மரமானது தெற்கே விழுந்தாலும் வடக்கே விழுந்தாலும், விழுந்த இடத்திலேயே மரம் கிடக்கும்.” – பிரசங்கி 11 : 3

மேல் காட்டப்பட்டுள்ள வசனங்களில் நீரியல் சுழற்சி எப்படி நடக்கிறது என்று கர்த்தருடைய வார்த்தை மிக தெளிவாக காண்பிக்கிறது.

5.கடலியல்

மத்தேயு ஃபோன்டைன் மௌரி என்பவர் கடலியல் துறைக்கு தந்தையாக கருதப்படுகிறார் .

அவர் கடற்படை வானிலை ஆய்வு, வழிசெலுத்தல் மற்றும் காற்று மற்றும் நீரோட்டங்களை பட்டியலிடுதல் ஆகியவற்றைப் படித்தார்.

அவர் தனது ஆய்வு  8 சங்கீதத்தால் ஈர்க்கப்பட்டதாக அவர் தனது குடும்பத்தினரிடம் கூறினார்.  “உம்முடைய கைகளின் கிரியைகள் மற்றும் கடல்களின் பாதைகள் வழியாகச் செல்லும் அனைத்தையும் நீர் அவரை ஆளுகை செய்ய வைத்தீர் . 

கடல்களிலுக்கும் பாதைகள் உண்டோ என்று ஆய்வு செய்ய தொடங்கினர் . அவரே அவர் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டது .

சங்கீதக்காரன் 2800 ஆண்டுகள் முன் கடலுக்கும் பாதை உண்டு என்று எழுதுகிறார் . எவ்வளவு ஆச்சிரியமாக உள்ளது அல்லவே ?

6.எண்ணற்ற நட்சத்திரங்கள்

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் 200 பில்லியன் டிரில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றார்கள் . இந்த கணக்கிற்கு எத்தனை சைபர்கள் உள்ளது என்று தெரியுமா ? 24 சைபர்கள் . இது நாம் பார்வைக்கு உள்ள நட்சத்திரங்கள் கணக்கு மட்டுமே . நாம் பார்க்க முடியாத தூரத்தில் மக அளவிற்கு எனில்லாத நட்சத்திரங்கள் உள்ளன.

தேவனுடைய வார்த்தை என்ன சொல்கிறது தெரியுமா ?

 “ வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல் அளக்கப்படாததுமாயிருக்கிறதுபோல, நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். “  –  எரேமியா 32 : 22 ( 2500 ஆண்டுகள் முன்பு எழுதப்பட்டது )

நாம் முன்னோர்கள் நட்சத்திரங்களை கணக்கிட முயற்சித்தார்கள். கடவுளுடைய வார்த்தை மிக தெளிவாக கூறுகிறது , எண்ணிற்கு அடங்காத நட்சத்திரங்கள் .

7.இரத்தமே வாழ்வின் ஆதாரம்

200 ஆண்டுகள் முன்பு கூட “இரத்தம் வெளியேற்றுதல் “ என்ற ஒரு சிகிச்சை இருந்து வந்தது. இதினால்  அநேகர் தங்கள் உயிரை இழந்தார்கள் . அது வரை நாம் இரத்த அணுக்கள் மூலமாகவே நாம் செல்களுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் சத்து பொருட்கள் அனுப்பப்படுகிறது  என்று தெரியாது.  

ஆனால் , பைபிளில்

  மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. “  –  லேவியராகமம் 17 : 11

மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது என்பது இங்கு தெளிவாக காட்டப்படுள்ளது . இரத்தம் வெளியேற்றுனால் மனிதன் இறந்து விடுவான் .

8. இரத்தம் உறைதல்

இரத்தம் உரைத்தல் பற்றி பைபிளில் கூறப்பட்டுள்ளதா ? ஆம்

விருத்தசேதனம் பற்றி என்ன பைபிள் கூறுகிறது ? விருத்தசேதனம் 8 ஆம் நாளில் செய்யவேண்டும் . ஏன் என்று கூறவில்லை . நாம் மருத்துவ அறிவியல் வளர வளர , இரத்தம் உறைய நமக்கு ப்ரொத்ரோம்பின் என்ற புரோத்தம் தேவை என்று புரிந்து கொண்டோம். 7 ஆம் நாள் வரை அந்த புரோத்தம் தேவையான அளவுக்கு இல்லை , 7 ஆம் நாள் வரை விருத்தசேதனம் செய்தல் இரத்த கசிவு அதிகமாக இருக்கும் என்று தெரிய வருகிறோம்.

. உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும். –  ஆதியாகமம் 17 : 12

9.சுகாதார சட்டங்கள்

1800கள் வரை மருத்துவர்கள் தங்கள் கைகளை பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் கையை மூழ்கி கழுவினார்கள் , கண்ணுக்கு தெரியாத கிருமிகள் அந்த தண்ணீரில் கையை கழுவும் ஒவொரு முறையும் கிருமிகள் பரவி அநேக நோயாளிகள் இறந்து போனார்கள் .

ஓடும் நீரில் கீழ் கைகளை கழுவ வேண்டும் என்று இப்போது நமக்குத் தெரியும்.

1845 ஆம் ஆண்டில், வியன்னாவில் உள்ள டாக்டர் இக்னாஸ் செம்மல்வீஸ் மருத்துவமனைகளில் பிரசவித்த பெண்களின் பயங்கரமான இறப்பு விகிதத்தைக் கண்டு திகிலடைந்தார் . பிரசவத்திற்குப் பிறகு 30 சதவீதம் பேர் இறந்தனர். இறந்த நோயாளிகளை டாக்டர்கள் பரிசோதிப்பார்கள், பின்னர் நேராக அடுத்த வார்டுக்கு சென்று கர்ப்பிணி தாய்மார்களை பரிசோதிப்பார்கள் என்று செம்மல்வீஸ் குறிப்பிட்டார்.

இது அவர்களின் வழக்கமான நடைமுறையாக இருந்தது, ஏனெனில் நுண்ணிய கிருமிகளில் நோய்கள் இருப்பது தெரியவில்லை.
பரிசோதனைக்கு முன் மருத்துவர்கள் கைகளைக் கழுவ வேண்டும் என்று செம்மல்வீஸ் வலியுறுத்தினார், இறப்பு விகிதம் உடனடியாக 2 சதவீதமாகக் குறைந்தது.

 “ பிரமியம் உள்ளவன் தன் பிரமியம் நீங்கிச் சுத்தமானால், தன் சுத்திகரிப்புக்கென்று ஏழுநாள் எண்ணிக்கொண்டிருந்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தன் தேகத்தை ஊற்றுநீரில் கழுவக்கடவன்; அப்பொழுது சுத்தமாயிருப்பான். “ – லேவியராகமம் 15: 13

10.தனிமைப்படுத்தலின் சட்டங்கள்

கொரோன வியாதி வந்த பிறகு அநேகருக்கு தனிமைப்படுத்துப்பல் என்றால் என்ன என்று தெரியும். ஆனால் பைபிளில் 3500 ஆண்டு முன்பே தனிமை படுத்துதல் பற்றி படிக்கிறோம்.

14 ஆம் நூற்றான்டு பிளேக் கொள்ளை நோய் பாதித்த போது இலட்ச கணக்கான மக்கள் இறந்து போனார்கள் . என்ன காரணத்தினால் இதனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என்று அவர்களுக்கு புரியவில்லை. கெட்ட காற்று அல்லது பேய் என்று நினைத்தார்கள் . லேவியராகமத்தில் சொல்லப்பட்டுள்ள தனிமைப்படுத்தலின் சட்டங்களை பின்பற்றியிருந்தால் இலட்ச கணக்கான பேர்களை காப்பாற்றியிருக்கலாம்.

“  அந்த வியாதி அவனில் இருக்கும் நாள்வரைக்கும் தீட்டுள்ளவனாக எண்ணப்படக்கடவன்; அவன் தீட்டுள்ளவனே; ஆகையால், அவன் தனியே குடியிருக்கவேண்டும்; அவன் குடியிருப்பு பாளயத்துக்குப் புறம்பே இருக்கக்கடவது.” – லேவியராகமம் 13 : 16