Untried, untrodden, and unknown as your future path… –
Octavius Winslow.(1808-1878)
அறியப்படாத, முயற்சி செய்யப்படாத, கடந்து செல்லாத, உங்களின் எதிர்கால பாதை… – ஆக்டவியஸ் வின்ஸ்லோ. (1808-1878) |
“ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்”
யோபு 23:10
அறியப்படாத, முயற்சி செய்யப்படாத, கடந்து செல்லாத, உங்களின் எதிர்கால பாதையானது, ஒவ்வொரு அடியும், என்றென்றும் மாறாத, நித்தியமான, உடன்படிக்கையின் தேவனாகிய கரத்தினால், வரைபடமாக்கப்பட்டதும், ஏற்பாடு செய்யப்பட்டதும், வழங்கப்பட்டதுமாய் இருக்கிறது. அவரே, நம்மை வழிநடத்துகிறவராயும், அவருடைய அன்பின் குமாரனுக்குள், நம்மை ஏற்றுக்கொண்டவராயும், ஆரம்பம் முதல் முடிவு வரை, அவர் நம்மை அறிந்திருக்கிறவராயும் இருக்கிறார். – இது அவருக்கு புதிதானதும் அல்ல, நிச்சயமற்றதும் அல்ல, மறைக்கப்பட்டதும் அல்ல. அவர் புத்திசாலித்தனமாகவும், தயவாயும், நம்முடைய எதிர்காலத்தை குறித்து அனைத்து காரியங்களை நம்மிடத்திலிருந்து மறைப்பதால் நாம் நன்றி சொல்லுகிறோம். எப்படி கடந்த கால நிகழ்வுகள் அனைத்தும் நமக்கு அறிந்ததோ, அப்படியே, எதிர்கால நிகழ்வுகள் அனைத்தும், அவர் தம் பார்வைக்கு, வெளிப்படையாகவும், காணக்கூடியதாகவும் உள்ளது. நம்முடைய மேய்ப்பனுக்கு, தம்முடைய மந்தையை, திறமையாகவும், மென்மையாகவும், பாதுகாப்பாகவும், பல வகையான பாதைகளின் வழியாய் வழி நடத்த அவருக்கு தெரியும். ஓ! வரவிருக்கும் ஆண்டிற்கு, வலுவான, ஆறுதலுடன், நிரம்பிய சிந்தனை எவ்வளவு அவசியம். அதாவது, வரவிருக்கும் ஆண்டில், நான் காலடி எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும், செல்லாத ஒவ்வொரு பாதையும், அவரால் நியமிக்கப்பட்டதாயும், அவர் அறிந்தவராயும் இருக்கிறார் என்ற சிந்தனை எவ்வளவு அவசியம். ஆம், அவருடைய, முன் அறிவு, ஞானம். மற்றும் நன்மை ஆகியவைகளினால், நாம் எடுத்து வைக்கிற ஒவ்வொரு புதிய பாதையையும், அவரால் நியமிக்கப்பட்டது. மேலும், அவைகளினால், நம்முடைய ஒவ்வொரு தேவைக்கும், போதுமானதாய் இருக்கிறது.
புதிய ஆண்டில் ஒவ்வொரு சிரமமும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு தேவையும் அதற்கு பொருத்தமான மற்றும் போதுமானவற்றை கொண்டு வரும்.
ஒவ்வொரு குழப்பத்திற்கும் அதற்குரிய வழிகாட்டுதல் இருக்கும்.
ஒவ்வொரு துன்பத்திற்கும் அதற்குரிய ஆறுதல் இருக்கும்.
ஒவ்வொரு சோதனைக்கும் அதற்குரிய பாதுகாப்பு இருக்கும்.
ஒவ்வொரு மேகத்திற்கும் அதற்குரிய ஒளி இருக்கும்.
ஒவ்வொரு துன்பத்திற்கும் அதற்குரிய பாடம் உண்டு.
ஒவ்வொரு தவறை சுட்டிக்காட்டி திருத்துவதில் அதற்குரிய போதனையை கற்றுக்கொடுக்கும்.
ஒவ்வொரு இரக்கமும் அதற்குரிய அன்பின் செய்தியை தெரிவிக்கும்.
ஆக, இந்த வாக்குத்தத்தின் நிறைவேறுதலை காண்பாய்.
“உன் நாட்களுக்குத்தக்கதாய் உன் பெலனும் இருக்கும்!”
free books for download
Sermon Download
Reformed Baptist Church - website
You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.