பத்துக் கட்டளைகளின் முக்கியத்துவம்
சினாய் மலையில், மோசே பத்துக் கட்டளைகளை கடவுளிடமிருந்து எழுத்து பூர்வமாக பெற்றார் . பத்து கட்டளைகள் கூட நீதியான வாழ்க்கை மற்றும் கூடாரத்தின் கட்டுமானத்தை நிர்வகிக்கும் கூடுதல் சட்டங்களையும் பெற்றார். தேவன் தனக்கென்று ஒரு கூட்ட ஜனத்தை தேர்ந்தெடுத்து அவர்கள் பரிசுத்தமான வாழ்க்கை வாழ உருவாக்கி வந்தார் .
10 கட்டளைகள்
2. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
மக்கள் நம்மை கெட்ட பெயர் கூறி அழைத்தால் நமக்கு பிடிக்காது அல்லவா? அவமரியாதையாக நடந்து கொள்கிறார்கள். கடவுளின் பெயர் பரிசுத்தமானது, அது பயபக்தியுடன் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;
ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
மரியாதை என்பது அவர்களை நேசிப்பதும், மதிப்பதும் ஆகும். உங்கள் பெற்றோரை நீங்கள் மதிக்கும்போது, அவர்கள் புத்திசாலிகள் என்பதால் நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள், கீழ்ப்படிகிறீர்கள். வீடுகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்பினார், எனவே இதை ஒரு முக்கியமான கட்டளையாக கொடுத்துள்ளார் .
கடவுளின் சட்டங்கள் நம்மைப் பாதுகாக்கின்றன
பின்னர் அவர் கூறுகிறார், “நான் அவர்களின் பாவங்களையும் அக்கிரம செயல்களையும் இனி ஒருபோதும் நினைவில் கொள்ள மாட்டேன்.” எபிரெயர் 10:16-17.
நம்மில் யாரும் பரிபூரணமானவர்கள் அல்ல, ஆனால் இந்த கட்டளைகளுக்கு நாம் தொடர்ந்து கீழ்ப்படிய வேண்டும். நாம் கடைபிடிக்க முடியாத கட்டளைகளை கடைபிடிக்க இயேசு வந்தார்.
யோவான் 10:10 ” நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன் ” என்று இயேசு கூறுகிறார்.
கடைசியாக . நீதிமொழிகள் 3 1-4 வசனங்கள் :
1. என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.
2. அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும்.
3. கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.
4. அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய்.
free books for download
Sermon Download
Reformed Baptist Church - website
You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.