கிருபை சத்திய தின தியானம்

டிசம்பர் 15                  கர்த்தருக்குக் காத்திரு                          ஏசாயா 49 : 16 – 26

’நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்க்கப்படுவதில்லை’ (ஏசாயா 49: 23)

கர்த்தருக்குக் காத்திரு. நீ ஒருகாலும் வெட்க்கமடைய மாட்டாய். எந்த காரியமானாலும் கர்த்தருக்காக, அவர் காலத்திர்காக, அவர் நேரத்திற்காகக் காத்திரு. அவர் கொடுக்கும் விடுதலைக்காக எதிர்நோக்கியிரு. இன்றைக்கு எந்தக் காரியமானாலும் உடனடியாக நடைபெறவேண்டும் என்பதற்காக அப்படியும், இப்படியும் சென்று செயல்படுவார்கள். அன்பானவர்களே! அது தோல்வியில் முடியும். நீ வெட்கப்பட்டு போவாய்.

            கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் எப்படிக் காத்திருக்க வேண்டும்? ‘கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன்’ (சங் 40 : 1). கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் பொறுமையோடுக் காத்திருக்கவேண்டும். தேவன் தம்முடையசர்வ ஞானத்தினால் எந்த விதத்தில் எந்த வேளையில் எப்படியாகச் செய்யவேண்டுமோ அப்படியாகச் செய்வார். நாம் அவசரப்படக்கூடாது. அவசரப்படுதல் காரியத்தைக் கெடுக்குமேயொழிய பிரயோஜனப்படாது. ஆபிரகாமுக்குத் தேவன் ஒரு குமாரனை வாக்குப்பண்ணினார். ஆபிரகாம்  கர்த்தருடைய காலத்துக்கும் நேரத்துக்கும் காத்திருக்கத் தவறினான். ஆபிரகாமுடைய மனைவி, ஆபிரக்காம் கத்திருத்தலுக்கு தடையாக இருந்தாள். எத்தனை சமையங்களில் கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் இவ்விதம் இடறலாயிருக்கிறார்கள்? தங்களுடைய காரியங்களில், தங்கள் பிள்ளைகளின் படிப்பு, திருமணம் ஆகிய காரியங்களில் தேவனுக்காக காத்திருப்பதில்லை.

            ஆபிரகாமின் மனைவி சாராள், ஆபிரகாமுக்கு ஒரு ஆலோசனைக் கொடுத்தாள். ‘நாம் கர்த்தருக்காக எவ்வளவு காலம் காத்திருக்கமுடியும்? என் வேலைகாரி ஆகாரை உனக்குத் தருகிறேன் என்றாள். ஆம்! ஆபிரகாமுக்கு அந்தத் தவறான யோசனைக்கு இணங்க்கிக்கொடுத்தான், அதனால் எத்தனை தேவையில்லாத பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது பாருங்கள். ஒருவேளை மற்றவர்கள் உனக்கு அவ்விதம் கர்த்தருக்கு காத்திருப்பதைத் தவிர்க்கும்படியான ஆலோசனைகள் கொடுக்கலாம். ஆனால் நீ அவர்களுக்குச் செவிகொடுப்பாயானால் நிச்சயம் பிற்காலத்தில் வெட்க்கப்படுவாய்.