குறித்தகாலத்துக்குத்’ தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருகிகிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய்ச் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்கு காத்திரு, அது நிச்சயமாய் வரும், அது தாமதிபதில்லை.’
( ஆபகூக் 2 : 3)

ஆபகூக் 2 : 1 –1

1. நான் என் காவலிலே தரித்து, அரணிலே நிலைகொண்டிருந்து, அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும், அவர் என்னைக் கண்டிக்கும்போது நான் என்ன உத்தரவு சொல்லுவேனென்றும் கவனித்துப்பார்ப்பேன் என்றேன்.

2. அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை.

3. குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.

4. இதோ, அகங்காரியாயிருக்கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல; தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.

5. அவன் மதுபானத்தினால் அக்கிரமஞ்செய்து அகங்காரியாகி, வீட்டிலே தரியாமல், அவன் தன் ஆத்துமாவைப் பாதாளத்தைப்போல விரிவாக்கித் திருப்தியாகாமல், மரணத்துக்குச் சமானமாய்ச் சகல ஜாதிகளையும் தன் வசமாகச் சேர்த்து, சகல ஜனங்களையும் தன்னிடமாகக் கூட்டிக்கொண்டாலும்,

6. இவர்களெல்லாரும் அவன்பேரில் ஒரு பழமொழியையும், அவனுக்கு விரோதமான வசைச்சொல்லையும் வசனித்து, தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக்கொள்ளுகிறவனுக்கு ஐயோ என்றும், அது எந்தமட்டும் நிற்கும் என்றும், அவன் தன்மேல் களிமண் சுமையையல்லவா சுமத்திக்கொள்ளுகிறான் என்றும் சொல்லுவார்கள்.

7. உன்னைக் கடிப்பவர்கள் சடிதியாய் எழும்புவதும், உன்னை அலைக்கழிப்பவர்கள் விழிப்பதுமில்லையோ? நீ அவர்களுக்குச் சூறையாகாயோ?

8. நீ அநேகம் ஜாதிகளைக் கொள்ளையிட்டபடியினால் ஜனங்களில் மீதியான யாவரும் நீ சிந்தின மனுஷரத்தத்தினிமித்தமும் நீ செய்த கொடுமையினிமித்தமும் உன்னைக் கொள்ளையிடுவார்கள்.

9. தீமையின் வல்லமைக்குத் தப்பவேண்டுமென்று தன் கூட்டை உயரத்திலே வைக்கும்படிக்கு, தன் வீட்டுக்குப் பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவனுக்கு ஐயோ!

10. அநேக ஜனங்களை வெட்டிப்போட்டதினால் உன் வீட்டுக்கு வெட்கமுண்டாக ஆலோசனைபண்ணினாய்; உன் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தாய்.

தேவனுடைய காலமே உனக்கு சிறந்தக் காலம். தேவன் தம்முடைய திட்டத்தை நிறவேற்றச் சரியான நேரத்தை வைத்திருக்கிறார். அது அவருடைய உன்னதமான சர்வ ஞானத்தோடே திட்டமிடப்பட்டது. அநேக சமையங்களில் நாம், காரியம் நிறைவேறவில்லையென்று அங்கலாய்க்கிறோம். ஆனால் தேவன் வைத்திருக்கிற வேளைக்காகப் பொறுமையுடன் காத்திருப்பது நல்லது. அவசரப்படுவதால் நாம் பெறும் காரியம் சிறந்ததாக இல்லாமல் போகலாம். ஆகவே எப்போதும் தேவனுடைய வேளைக்காக காத்திருப்பது நல்லது.அந்த நேரத்தில் தேவன் தம்முடைய கிருபையை மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் செயல்படுவதைப் பார்த்து நாம் துதிப்போம்.

அநேக வேளைகளில் நாம் எதிர்ப்பார்த்த காரியம், எதிர்பார்த்த நேரத்தில் நடைபெறவில்லையென்றால், நாம் உடனே தேவனுடைய வார்த்தையை சந்தேகிக்கிறோம். ஆபிரகாமின் மனைவி சாராள், தேவன் உன் சந்ததி விளங்கும் என்று சொன்ன வாக்குத்தத்தம் நிறைவேற காலதாமதம் ஆனபோது சந்தேகம் கொள்ள ஆரம்பித்தால். ஆகார் மூலம் குழந்தை பெற திட்டமிட்டு, ஆகாரை ஆபிரகாமுக்குக் கொடுத்தால். அதன் விளைவு என்ன ஆயிற்று? அவளோ ஆகாரினால் உதாசீனப்படுத்தப்பட்டால். இஸ்மவேல் அவளுடைய சொந்தக் குமாரனாகிய ஈசாக்குக்கு இடையூறு விளைவிக்கிறவனாக ஆனான்.

அன்பானவர்களே! தேவனுடைய வார்த்தையை, வாக்குத்தத்தத்தை சந்தேகிக்காதீர்கள். அது பொய்யல்ல. தாமதித்தாலும் அதற்கு காத்திரு, அது நிச்சயம் வரும். அது தாமதிப்பதில்லை. அது தேவனின் மிகச்சிறந்த அமைப்பில், ஏற்றவேளையில் நிறவாய்ச்செய்யப்படும். நீ அப்போது காத்திருந்தது வீண் அல்ல என்று சொல்லுவாய். உன் எதிர்பார்ப்பு வீணய் போகவில்லை என்று அறியும்போது உன்னுடைய மகிழ்ச்சி இரட்டிப்பானதாய் இருக்கும்.

free books for download

The Charismatic Illusion | ஆவிக்குரிய குழப்பங்கள் ஏன் ?

பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை...

Personal Spiritual Life | தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை

நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை நாம் எப்படி...

CHASTISEMENT | தேவ சிட்சை

ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் அனுதினமும்...

The immutability of God’s word | தேவனுடைய மாறாத பிரமாணம்

மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய...

சீஷன் என்பவன் யார்?

சீஷத்துவம் என்பது தேவனுடைய கட்டளை:    ...

ஸ்பர்ஜனின் வாழ்க்கை வரலாறு | Spurgeon’s biography in tamil

சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் (C.H. Spurgeon) 1894 ஆம்...

தேவனுடைய வார்த்தையின் வல்லமை

 தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில்...

மனந்திரும்புதல் என்றால் என்ன?

மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்...

Reformed Baptist Church - website

You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.