’நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம்.’
(தானி 9 : 18)
தானியேல் 9 :10 – 19
11. இஸ்ரவேலர் எல்லாரும் உமது நியாயப்பிரமாணத்தை மீறி, உமது சத்தத்துக்குச் செவிகொடாமல் விலகிப்போனார்கள். அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகையால் தேவனுடைய தாசனாகிய மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபமும் ஆணையாக்கினையும் எங்கள்மேல் சொரியப்பட்டன.
12. எருசலேமில் சம்பவித்ததுபோல வானத்தின்கீழ் எங்கும் சம்பவியாதிருக்கிற பெரிய தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினதினால், அவர் எங்களுக்கும் எங்களை நியாயந்தீர்த்த நியாயாதிபதிகளுக்கும் விரோதமாகச் சொல்லியிருந்த தம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினார்.
13. மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே இந்தத் தீங்கெல்லாம் எங்கள்மேல் வந்தது; ஆனாலும் நாங்கள் எங்கள் அக்கிரமங்களை விட்டுத் திரும்புகிறதற்கும், உம்முடைய சத்தியத்தைக் கவனிக்கிறதற்கும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினதில்லை.
14. ஆதலால் கர்த்தர் கவனமாயிருந்து, அந்தத் தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினார்; எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர்; நாங்களோ அவருடைய சத்தத்துக்குக் செவிகொடாமற்போனோம்.
15. இப்போதும் உமது ஜனத்தைப்பலத்த கையினால் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி, உமக்குக் கீர்த்தியை உண்டாக்கின எங்கள் தேவனாகிய ஆண்டவரே, நாங்கள் பாவஞ்செய்து, துன்மார்க்கராய் நடந்தோம்.
16. ஆண்டவரே, உம்முடைய சர்வநீதியின்படியே, உமது கோபமும் உமது உக்கிரமும் உம்முடைய பரிசுத்த பர்வதமாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும் எங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய ஜனமாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானோம்.
17. இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்.
18. என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம்.
19. ஆண்டவரே கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும்; என் தேவனே, உம்முடைய நிமித்தமாக அதைத் தாமதியாமல் செய்யும்; உம்முடைய நகரத்துக்கும் உம்முடைய ஜனத்துக்கும் உம்முடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறதே என்றேன்.
தானியேல் தேவனை நோக்கி ஜெபித்த ஜெபத்தில் கானப்படும் மையத்தை அதாவது அதன் சாராம்சத்தைப் பாருங்கள். அது முற்றிலும் அவனை வெறுமையாக்கி ஏறேடுக்கப்பட்ட ஜெபம். அநேகர் தேவனை நோக்கி ஜெபிக்கும்போது அவர்கள் அதற்கு பதிலைப் பெற தகுதியானவர்கள் போல ஜெபிக்கிறார்கள். அருமையானவர்களே! மெய்யாலும் தங்கள் பாவத்தன்மையையும் தேவனுடைய பரிசுத்தத் தன்மையையும் இருதயப்பூர்வமாக விளங்கிக் கொள்ளுகிறவர்களின் ஜெபம் இருக்கும். இவ்விதமான ஜெபம் நொறுங்குண்டதும் நறுங்குடதுமான இருதயத்திலிருந்து தான் வரும். அவ்விதமான இருதயத்தை மட்டுமல்ல, அதிலிருந்து ஏறெடுக்கப்படும் ஜெபத்தையும் தேவன் புறக்கணிக்கமாட்டார் (சங் 51 : 17)
தேவன் இரக்கமுள்ளவர் என்பதையும் அவருடைய இரக்கங்களைச் சார்ந்து வாழும்படியான வாழ்க்கையையும் நாம் எப்பொழுதும் கொண்டிருக்கவேண்டும். எந்த ஒரு மனிதன் தன் சொந்த நீதியை நம்பிக்கொண்டிருக்கிறார்களோ, அவன் ஒருபோது தேவனுடைய இரக்கத்தைச் சார்ந்துக்கொள்ளமாட்டான். தேவன் மோசேயை நோக்கி: ‘எவன் மேல் இரக்கமாயிருக்க சித்தமாயிருப்பேனோ அவன் மேல் இரக்கமாயிர்ப்பேன் எவன் மேல் உருக்கமாயிருக்க சித்தமாயிருப்பேனோ அவன் மேல் உருக்கமாயிருப்பேன். ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்’ (ரோமர் 9 : 15, 16) என்று சொன்னார். நீங்கள் கர்த்தருடைய இரக்கத்தை எல்லா சூழ்நிலைகளிலும் சார்ந்த்துக்கொள்ளுங்கள். அது உங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தும். உன்னுடைய சொந்த நீதி உனக்கு உதவாது. ‘ நாம் செய்த நீதியின் கிரிகைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே நம்மை இரட்சித்தார். (தீத்து 3 : 5). நீ மெய்யாலும் இரட்சிப்பை பெறவேண்டுமானால் தேவனுடைய இரக்கத்தைச் சார்ந்துக்கொள். ஆண்டவரே! நான் ஒரு பாவி. என் நீதி கந்தையானது. உம்முடைய நீதியினால் என்னை ஆட்கொண்டருளும் என்று ஜெபியுங்கள். தேவன் இரட்சிப்பார்.
free books for download
Sermon Download
Reformed Baptist Church - website
You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.