(ரோமர். 5 : 15).
ரோமர். 5 : 1 – 21
1. இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
2. அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.
3. அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து,
4. உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்.
5. மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.
6. அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்.
7. நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.
8. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
9. இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
10. நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
11. அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்.
12. இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.
13. நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.
14. அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.
15. ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.
16. மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.
17. அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.
18. ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.
19. அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.
20. மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.
21. ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.
இந்த வசனத்தின் மூலமாக பாவத்தின் வலிமையைக் காட்டிலும் கிருபையின் வலிமை எவ்வளவு பெரியதென்று பாருங்கள். பாவம் ஒரு மனிதனை மீளமுடியாத படுகுழியில் தள்ளிற்று. பாவம் அவனை அடிமையாக்கிற்று. பாவஞ்செய்கிற எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான். (யோவான் 8 : 34 ). இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் அடிமையாகவே பிறக்கிறான். ஆகவேதான் அவன் எஜமானாகிய பாவத்திற்கு அவன் வாழ்நாள் முழுவதும் பணிசெய்கிறான். முதன் முதலில் பாவத்தில் விழுந்துபோன ஆதாமை நோக்கிப்பார்போமானால் பாவத்தின் கொடுமையை விளங்கிக்கொள்ளமுடியும். அவன் கீழ்படியாமல் பாவம் செய்தபோது தேவனோடு கொண்டிருந்த மகிமைகரமான ஐக்கியத்தை இழந்தான். பாவம் அவனை வெட்கத்துக்குரியவனாய் ஆக்கிற்று. ஆதாமும் ஏவாளும் தங்களுக்குள் இருந்த தேவ ஐக்கியத்தையும் இழந்தார்கள்.
பாவத்தின் கொடுமையைப் பாருங்கள். அதின் கொடுமை அன்றோடு நின்றுவிடவில்லை, இன்றும் அதன் ஆளுகை மனிதனை கொடியவனாக்கிறது. சமுதாயம் சீரழிந்து வருகிறது. சுபாவங்களில் அவன் கொடியவனாய் தன்னை வெளிப்படுத்துகிறான். இந்த உலகத்தில் பிறந்திருக்கிற ஒவ்வொரு மனிதனின் நிலையும் இதுவே.
இவ்விதமான சீரழிந்த மனிதனை தேவன் தேடி இரட்சிப்பதுதான் கிருபை. பாவத்தின் அடிமை என்ற பெயருடைய அவனை தேவனின் பிள்ளையென்று மாற்றுவதே கிருபை. அவனுடைய பாவத்தின் தண்டனையை பரிசுத்தமான தேவகுமாரன் சுமந்து, அந்த தண்டனையிலிருந்து அவனை விடுவிப்பதுதான் கிருபை. இன்றும் அவனை பாவத்தின் அடிமை தனத்திலிருந்து தேவன் விடுவிப்பது கிருபை. அவனை ஆற்றி தேற்றி வழிநடத்தி செல்ல பரிசுத்த ஆவியானவர் அவனில் வாசம்பண்ணி செயல்படுகிறாரே அதுதான் கிருபை. பாவத்திலிருந்த மனிதனை கிறிஸ்துவோடு உயிர்பித்து உன்னதங்களிலே அவரோடே கூட உட்காரச்செய்கிறதுதான் கிருபை. கிருபையின் வலிமை எவ்வளவு பெரியதென்று பாருங்கள்!
free books for download
Sermon Download
Reformed Baptist Church - website
You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.