எல்லாவற்றையும் ஆளுகிறவர்  ஜனவரி 5

 

‘தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்.

 

’( 1நாளா 29 : 12 ) 

            

வேத பகுதி | 1 நாளா 29 : 1 – 12

1. பின்பு தாவீதுராஜா சபையார் எல்லாரையும் நோக்கி: தேவன் தெரிந்துகொண்ட என் குமாரனாகிய சாலொமோன் இன்னும் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; செய்யவேண்டிய வேலையோ பெரியது; அது ஒரு மனுஷனுக்கு அல்ல, தேவனாகிய கர்த்தருக்குக் கட்டும் அரமனை.

2. நான் என்னாலே இயன்றமட்டும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று பொன்வேலைக்குப் பொன்னையும், வெள்ளிவேலைக்கு வெள்ளியையும், வெண்கலவேலைக்கு வெண்கலத்தையும், இரும்புவேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க காந்தியுள்ள கற்களையும், பலவருணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், வெண்கற்பாளங்களையும், கோமேதக முதலிய கற்களையும் ஏராளமாகச் சவதரித்தேன்.

3. இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்.

4. அறைகளின் சுவர்களை மூடுவதற்காகவும், பொன்வேலைக்குப் பொன்னும், வெள்ளிவேலைக்கு வெள்ளியும் உண்டாயிருக்கிறதற்காகவும், கம்மாளர் செய்யும் வேலை அனைத்திற்காகவும, ஓப்பீரின் தங்கமாகிய மூவாயிரம் தாலந்து தங்கத்தையும், சுத்த வெள்ளியாகிய ஏழாயிரம் தாலந்து வெள்ளியையும் கொடுக்கிறேன்.

5. இப்போதும் உங்களில் இன்றையதினம் கர்த்தருக்குத் தன் கைக்காணிக்கைகளைச் செலுத்த மனப்பூர்வமானவர்கள் யார் என்றான்.

6. அப்பொழுது வம்சங்களின் பிரபுக்களும், இஸ்ரவேல் கோத்திரங்களின் பிரபுக்களும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும், ராஜாவின் வேலைக்காரராகிய பிரபுக்களும் மனப்பூர்வமாய்,

7. தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து பொன்னையும், பதினாயிரம் தங்கக்காசையும், பதினாயிரம் தாலந்து வெள்ளியையும், பதினெண்ணாயிரம் தாலந்து வெண்கலத்தையும், லட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள்.

8. யார் கையில் ரத்தினங்கள் இருந்ததோ, அவர்கள் அவைகளையும் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷத்திற்கென்று கெர்சோனியனான யெகியேலின் கையிலே கொடுத்தார்கள்.

9. இப்படி மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான்.

10. ஆகையால் தாவீது சபை அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்திச் சொன்னது: எங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சதாகாலங்களிலும் தேவரீருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

11. கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர்.

12. ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.

தாவீது தான் எழுதின சங்கீதங்களில் மறுபடியும் மறுபடியும் சொல்லும் ஒரு காரியம், தேவன் சர்வத்தையும் ஆளும் சர்வ ஏகாதிபத்திய தேவன். ஒரு மனிதன் எந்த அளவுக்கு, தேவன் சர்வத்தையும் ஆளும் தேவாதி தேவன் என்பதை விளங்கிகொள்ளுகிறானோ, அந்த அளவுக்கு அவன் அவரை உயர்த்தவும், தன்னைத் தாழ்த்தவும் வாஞ்சிப்பான். வேதம் வலியுறுத்தும் உண்மை இது. இதுவே வேதத்தின் மையமான போதனையென்பதை நாம் அறிந்துக்கொள்ளவேண்டும். ’உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை (உபா 4: 39 ). அவர் தேவாதி தேவனாக ராஜாதி ராஜாவாக ஆளுகை செய்கிறார். ‘கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறார்’ (சங் 93 : 1). கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரீகம் சர்வத்தையும் ஆளுகிறது (சங் 103 : 19). அவருடைய ஆளுகைக்கு அப்பாற்பட்டது ஒன்றுமில்லை. நீயும் நானும் அவருடைய ஆளுகைக்கு உட்பட்டவர்கள் தான் என்பதை நினைத்துக்கொள். இவ்விதமான தேவனிடத்தில் நம்மை முற்றிலும் தாழ்த்தி  ஒப்புக்கொடுப்பதே நமக்கு மேன்மையைத் தரும். இந்த தேவனின் ஆளுகையின் கீழ்தான் அண்டசராசரங்களும் இருக்கின்றன ‘வானத்திலும் பூமியிலும், சமுத்திரங்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார் (சங் 135 :6 ). அவர் செய்ய நினைத்தைத் தடுக்கக்கூடியவன் ஒருவனுமில்லை. ‘இதோ, அவர் பறித்துக்கொண்டு போகிறார், அவரை மறிப்பவன் யார்? ( யோபு 9 : 12).

`           அவர் சர்வத்தை மாத்திரமல்ல, உன்னுடைய வாழ்க்கையின் அனைத்தையும் ஆளுகை செய்கிறவர் அவரே. உன் வாழ்க்கையின் எல்லாவற்றையும் நிர்ணயத்திருக்கிறவரும் அவரே. ஆகவே எப்பொழுதும் அதை நீ உணர்ந்து வாழுவாயானால், அது உன் வாழ்க்கையில் பெரிய ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். அவரே சர்வ ஏகாதிபத்திய தேவன் என்கிற சத்தியம் உன் வாழ்க்கைக்கு பெரிய நங்கூரமாயிருக்கும். அன்பானவரே! உன் வாழ்க்கையில் அவ்விதம் மெய்யாய் விசுவாசிக்கமுடிகிறதா? தேவனின் சர்வ ஏகாதிபத்தியம் உனக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுக்கட்டும்.

 

 

free books for download

The Charismatic Illusion | ஆவிக்குரிய குழப்பங்கள் ஏன் ?

பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை...

Personal Spiritual Life | தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை

நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை நாம் எப்படி...

CHASTISEMENT | தேவ சிட்சை

ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் அனுதினமும்...

The immutability of God’s word | தேவனுடைய மாறாத பிரமாணம்

மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய...

சீஷன் என்பவன் யார்?

சீஷத்துவம் என்பது தேவனுடைய கட்டளை:    ...

ஸ்பர்ஜனின் வாழ்க்கை வரலாறு | Spurgeon’s biography in tamil

சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் (C.H. Spurgeon) 1894 ஆம்...

தேவனுடைய வார்த்தையின் வல்லமை

 தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில்...

மனந்திரும்புதல் என்றால் என்ன?

மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்...

Reformed Baptist Church - website

You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.