“இவரே சமாதான காரணர்”
(மீகா 5:5)

மீகா 5:1-15

1. சேனைகளையுடைய நகரமே, இப்போது தண்டுதண்டாகக் கூடிக்கொள்; நமக்கு விரோதமாக முற்றிக்கை போடப்படும்; இஸ்ரவேலுடைய நியாயாதிபதியைக் கோலினால் கன்னத்திலே அடிப்பார்கள்.

2. எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.

3. ஆனாலும் பிரசவிக்கிறவள் பிரசவிக்கிறமட்டும் அவர்களை ஒப்புக்கொடுப்பார்; அப்பொழுது அவருடைய சகோதரரில் மீதியானவர்கள் இஸ்ரவேல் புத்திரரோடுங்கூடத் திரும்புவார்கள்.

4. அவர் நின்றுகொண்டு, கர்த்தருடைய பலத்தோடும் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் மகத்துவத்தோடும் மேய்ப்பார்; ஆகையால் அவர்கள் நிலைத்திருப்பார்கள்; அவர் இனிப் பூமியின் எல்லைகள் பரியந்தமும் மகிமைப்படுவார்.

5. இவரே சமாதான காரணர்; அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பரையும் மனுஷரில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன்.

6. இவர்கள் அசீரியா தேசத்தையும், நிம்ரோதின் தேசத்தையும், அதினுடைய வாசல்களுக்கு உட்புறமாகப் பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்; அசீரியன் நம்முடைய தேசத்தில் வரும்போதும், நம்முடைய எல்லைகளை மிதிக்கும்போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார்.

7. யாக்கோபிலே மீதியானவர்கள் கர்த்தராலே வருகிற பனியைப்போலவும், மனுஷனுக்குக் காத்திராமலும், மனுபுத்திரருக்குத் தாமதியாமலும், பூண்டுகள்மேல் வருகிற மழைகளைப்போலவும், அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள்.

8. யாக்கோபிலே மீதியானவர்கள், சிங்கம் காட்டுமிருகங்களுக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாகவும், கடந்துபோய் மிதித்துத் தப்புவிப்பார் இல்லாமல் பீறிப்போடுகிற பாலசிங்கம் ஆட்டுமந்தைகளுக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாகவும் ஜாதிகளுக்குள் அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள்.

9. உன்னுடைய கை உன் விரோதிகளின்மேல் உயரும்; உன் சத்துருக்களெல்லாரும் சங்கரிக்கப்படுவார்கள்.

10. அந்நாளிலே நான் உன் குதிரைகளை உன் நடுவில் இராதபடிக்குச் சங்கரித்து, உன் இரதங்களை அழித்து,

11. உன் தேசத்துப் பட்டணங்களைச் சங்கரித்து, உன் அரண்களையெல்லாம் நிர்மூலமாக்கி,

12. சூனிய வித்தைகள் உன் கையில் இராதபடிக்கு அகற்றுவேன்; நாள் பார்க்கிறவர்கள் உன்னிடத்தில் இல்லாமற்போவார்கள்.

13. உன் சுரூபங்களையும் உன் சிலைகளையும் உன் நடுவில் இராதபடிக்கு நிர்மூலமாக்குவேன்; உன் கையின் கிரியையை நீ இனிப் பணிந்துகொள்ளாய்.

14. நான் உன் விக்கிரகத்தோப்புகளை உன் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கி, உன் பட்டணங்களை அழித்து,

15. செவிகொடாத புறஜாதிகளிடத்திலே கோபத்தோடும் உக்கிரத்தோடும் நீதியைச் சரிக்கட்டுவேன் என்றார்.

நாம் சமாதானமற்ற உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கு பார்த்தாலும் சமாதானக் குறைச்சல் மலிந்துக்கிடக்கின்றது. நாட்டுக்கு நாடு சமாதானமின்மை, சமாதானமற்ற சூழ்நிலைகள் எங்கும் காணப்படுகிறது. சமாதானமின்மை அநேக குடும்பங்களில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சமாதானமின்மை குடும்பங்களில் கணவன், மனைவி, பிள்ளைகள் மத்தியிலுறவைப் பாதிக்கிறது. வெறுப்பு, கசப்பு போன்ற கனிகள் அங்கு காணப்படுகின்றன. தனிமனிதனுடைய வாழ்க்கையிலும் இருதயத்திலும் சமாதானமின்மை ஆளுகை செய்கிறது.

மேலலே சொல்லப்பட்ட இந்த வசனத்தை மீகா தீர்க்கத்தரிசி, வரப்போகிற மேசியாவான ஆண்டவராகிய இயேசுவைக் குறித்து இவ்விதம் சொல்லியிருக்கிறார். ‘இவரே சமாதான காரணர்‘ இவரே சமாதானத்தின் ஊற்று, இயேசு இல்லாத இடத்தில் சமாதானம் இருக்காது. இயேசுவின் ஆளுகை இல்லாத இடத்தில் சமாதானம் இருக்காது. அநேகருடைய வீட்டில் ‘இயேசுவே இந்த வீட்டின் தலைவர்‘ என்ற வசனப்பலகை மாட்டாப்பட்டிருக்கும். ஆனால் அங்கு நடப்பதற்கும் இயேசுவிற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. அன்பானவர்களே! மெய்யாலும் இயேசு உங்கள் வீட்டின் தலைவராக இருக்கிறாரா? அவரின் ஆளுகை உங்கள் வீட்டில் உண்டா? அவருடைய வார்த்தைக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறதா? சிந்தித்துப் பாருங்கள்.

இயேசு ஒருவரே மெய்யான சமதானத்தை நமக்குக் கொடுக்க வல்லவர். இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்பு கலங்கிப்போன சீஷர்களைப் பார்த்துசொன்னதைப் பாருங்கள்: “சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்கு பயந்ததினால் கதவுகள் பூட்டப்பட்டிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்” (யோவான் 20:19). இயேசு ஒருவரே நமக்கு சமாதானத்தைக் கொடுக்கிறவர். “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” (யோவான் 14:27).

free books for download

The Charismatic Illusion | ஆவிக்குரிய குழப்பங்கள் ஏன் ?

பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை...

Personal Spiritual Life | தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை

நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை நாம் எப்படி...

CHASTISEMENT | தேவ சிட்சை

ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் அனுதினமும்...

The immutability of God’s word | தேவனுடைய மாறாத பிரமாணம்

மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய...

சீஷன் என்பவன் யார்?

சீஷத்துவம் என்பது தேவனுடைய கட்டளை:    ...

ஸ்பர்ஜனின் வாழ்க்கை வரலாறு | Spurgeon’s biography in tamil

சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் (C.H. Spurgeon) 1894 ஆம்...

தேவனுடைய வார்த்தையின் வல்லமை

 தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில்...

மனந்திரும்புதல் என்றால் என்ன?

மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்...

Reformed Baptist Church - website

You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.