‘இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமை’ –
(ரோமர் 8 : 18)
வேத பகுதி | ரோமர் 8 : 11 -19
12. ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல.
13. மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.
14. மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
15. அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
16. நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.
17. நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.
18. ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.
19. மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு கிறிஸ்தவனிலும் தேவனுடைய மகிமை வெளிப்படும் வேளையை தேவன் வைத்திருக்கிறார். ஆனால் இந்த மகிமை எதற்கு ஈடாக கொடுக்கப்படுகிறது? ஆம்! அவைகள் கடந்து போகும் பாடுகளுக்கு ஈடாகக் கொடுக்கபடுகிறது. பாவத்தின் மரணம் ஆத்துமா மரணம். ஆனால் பாடுகளின் சம்பளம் மகிமை. அவைகள் பல மடங்காக பெருக்கிக் கொடுக்கப்படுகிறது. ஆகவே அருமையான சகோதரனே! சகோதரியே! உன்னுடைய பாடுகளைக் குறித்து முற்றிலும் நம்பிக்கையற்று சோர்ந்துபோகாதே. தேவன் அவைகளை மகிமையாக உனக்குத் தருவார் என்ற நம்பிக்கையினால் உன்னை தேற்றிக்கொள். ஆம்! அது தேவனுடைய வார்த்தை.
தேவனுடைய மக்கள் பாடுகளில் கடந்து போகும்போது தேவன் அவர்களை கைவிடுவதில்லை. அந்த வேளைகளில், ஆறுதலினால் அவர்களை ஆற்றுகிறார். தேற்றுகிறார். ஆறுதலின் தேவனான அவர், தம்முடைய ஆறுதலைக் கொடுத்து அவைகளின் வழியாக நடத்திச்செல்லுகிறார். பவுல் நீங்கள் எங்களோடே கூட பாடுபடுகிறது போல எங்களோடே ஆறுதலும் அடைவீர்கள்’ (கொரி 1 : 7). என்கிறார். நீ பாடுகளின் வேளையில் என்ன செய்யவேண்டும்? ஆறுதல் கொடுக்கும் தேவனை நோக்கிப்பார்க்கஏண்டும். அவர்தாமே தேவக்குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்படிதலைக் கற்றுக்கொண்டு’ (எபி 5 : 8) என்று சொல்லப்படுகிறது. சிலுவையைச் சுமந்து செல்லுகிற நீ உன் வாழ்வின் முடிவில் சிலுவையை விட்டு கிரீடத்தைப் பெறும் நாள் உண்டு என்பது, உன்னைப் பாடுகளின் மத்தியில் உற்சாகப்படுத்த்டும்.
மேலும் பாடுபடுகிற உனக்கு தேவன் உதவியை வாக்குப்பண்ணியிருக்கிறார். நீ உதவியற்று நிர்பாக்கியனாய்க் கைவிடப்படமாட்டாய். ஆதலால் அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபடுகிறதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார். (எபி 2 :18). அன்பானவர்களே! எவ்வளவாய் பாடுகள் படுகிறீகளோ அவ்வளவாய் மகிமையாக பலமடங்குகளில் உங்களுக்குக் கொடுக்கப்படும் என்பதை மறவாதீர்கள்.
free books for download
Sermon Download
Reformed Baptist Church - website
You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.