நீதியைப் பார்ப்பேன்  |    மார்ச்: 10  

 

நான் கர்த்தருக்கு விரோதமாக  பாவம் செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்குமட்டும் அவருடைய கோபத்தைக் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன்.

(மீகா 7 : 9)  

            

வேத பகுதி | மீகா 7 : 1 – 10

1. ஐயோ! உஷ்ணகாலத்துக் கனிகளைச் சேர்த்து, திராட்சப்பழங்களை அறுத்தபின்பு வருகிறவனைப்போல் இருக்கிறேன்; புசிக்கிறதற்கு ஒரு திராட்சக்குலையும் என் ஆத்துமா இச்சித்த முதல் அறுப்பின் கனியும் இல்லை.

2. தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை; அவர்களெல்லாரும் இரத்தஞ்சிந்தப் பதிவிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான்.

3. பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் துராசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாய்ப் புரட்டுகிறார்கள்.

4. அவர்களில் நல்லவன் முட்செடிக்கொத்தவன், செம்மையானவன் நெரிஞ்சிலைப்பார்க்கிலும் கடுங்கூர்மையானவன்; உன் காவற்காரர் அறிவித்த உன் தண்டனையின் நாள் வருகிறது; இப்பொழுதே அவர்களுக்குக் கலக்கம் உண்டு.

5. சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு.

6. மகன் தகப்பனைக் கனவீனப்படுத்துகிறான்; மகள் தன் தாய்க்கு விரோதமாகவும், மருமகள் தன் மாமிக்கு விரோதமாகவும் எழும்புகிறார்கள்; மனுஷனுடைய சத்துருக்கள் அவன் வீட்டார்தானே.

7. நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்.

8. என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.

9. நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்குமட்டும் அவருடைய கோபத்தைச் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன்.

10. உன் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று என்னோடே சொல்லுகிற என் சத்துருவானவள் அதைப் பார்க்கும்போது வெட்கம் அவளை மூடும்; என் கண்கள் அவளைக் காணும்; இனி வீதிகளின் சேற்றைப்போல மிதிக்கப்படுவாள்.

மீகா தீர்க்கத்தரிசி தேவனுடைய இரக்கம், தேவனுடைய தண்டனை இரண்டையும் அதிகமாக இந்த புஸ்தகத்தில் எடுத்துச்சொல்லுகிறார். அநேகர் தேவனுடைய தண்டனை என்று அவர்களுடைய வாழ்க்கையில் அனுமதிக்கப்படும் சோர்ந்து போகிறார்கள், அல்லது தேவன் பேரில் கோபம்கொள்ளுகிறார்கள். காரணமில்லாமல் தேவன் நம்மைத் தண்டிக்கமாட்டார். தேவன் தம்முடைய மக்களைச் சீர்ப்படுத்தவே சிட்சிக்கிறார் என்றும், தேவனுடைய சிட்சையானது, நாம் அவருடைய பிள்ளையாக இருக்கிறோம் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது என்றும் வேதம் சொல்லுகிறது. ஆகவே நாம் சோர்ந்து போக வேண்டிய அவசியமில்லை.

இவ்விதமான வேளைகளில், நாம் முரட்டாட்டமும் கலக குணமுள்ளவர்களாய் தேவனுக்கு எதிர்த்து நிற்பது, இன்னும் அதிகமாக நம்முடைய அமைதியைக் குலைக்கும். இன்னும் நம்முடைய பாவத்தைப் பெருகப்பண்ணுவோம். இன்னும் அதிகமாக நம்முடைய இருதயம் கடினப்படும். ஆனால் ‘என் நியாயத்தை விசாரிக்குமட்டும் அவருடைய கோபத்தைச் சுமப்பேன்’  என்று ஒப்புக்கொடுப்பது, நம்முடைய ஆவிக்குரிய அமைதியை இந்தவிதமான சூழ்நிலையிலும் காத்துக்கொள்ளும். நம்மில் இன்னும் அதிகம் பொறுமையை அடைய நமக்கு உதவி செய்யும். நாம் அவ்விதம் கடந்துபோகிறதை மற்றவர்கள் பார்க்கும்போது ஆண்டவருடைய நாமம் மகிமைப்படும்.

மேலும் இந்த ஒப்புக்கொடுத்தல் தண்டனைக்கு ஒப்புக்கொடுப்பதாக மாத்திரமல்ல, அது நம்பிக்கையோடு ஒப்புக்கொடுக்கிறதாய் இருக்கிறது. ‘அவர் என்னை  வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப்பார்ப்பேன்.’ உன்னுடைய காரியம் எவ்வளவு இருண்டதாக இருந்தாலும், உன்னை இரட்சித்த தேவன் அதை வெளிச்சமாக்குவார் என்பதில் சந்தேகம் கொள்ளாதே. அவருக்குக் காத்திருக்கிறவர்களை அவர் வெட்கமடையச் செய்யமாட்டார்.

 

free books for download

The Charismatic Illusion | ஆவிக்குரிய குழப்பங்கள் ஏன் ?

பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை...

Personal Spiritual Life | தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை

நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை நாம் எப்படி...

CHASTISEMENT | தேவ சிட்சை

ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் அனுதினமும்...

The immutability of God’s word | தேவனுடைய மாறாத பிரமாணம்

மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய...

சீஷன் என்பவன் யார்?

சீஷத்துவம் என்பது தேவனுடைய கட்டளை:    ...

ஸ்பர்ஜனின் வாழ்க்கை வரலாறு | Spurgeon’s biography in tamil

சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் (C.H. Spurgeon) 1894 ஆம்...

தேவனுடைய வார்த்தையின் வல்லமை

 தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில்...

மனந்திரும்புதல் என்றால் என்ன?

மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்...

Reformed Baptist Church - website

You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.