“அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்,
நான் அவர்கள் தேவனாயிருப்பேன்”
(எரேமியா 32:38)
எரேமியா 32:37-42
37. இதோ, என் சினத்திலும், என் கோபத்திலும், என் மகா உக்கிரத்திலும், நான் அவர்களைத் துரத்தின எல்லா தேசங்களிலுமிருந்து அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை இந்த ஸ்தலத்துக்குத் திரும்பிவரவும் இதிலே சுகமாய்த் தங்கியிருக்கவும் பண்ணுவேன்.38. அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்.39. அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு,40. அவர்களுக்கு நன்மைசெய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்றுபோகாதபடிக்கு, எனக்குப்பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து,41. அவர்களுக்கு நன்மை செய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்த தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன்.42. நான் இந்த ஜனத்தின்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரப்பண்ணினதுபோல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
தேவன் தாமே எரேமியாவின் தீர்க்கதரிசியின் மூலமாக செய்க்கூடிய உன்னதமான காரியத்தைக் குறித்துப் பேசுகிறார். இயேசு கிறிஸ்துவின் மூலமாக தமக்கென்று அவர் ஜனங்களை தெரிந்துகொண்டு இரட்சிக்கிறவராக இருக்கிறார். இத அவர் எவ்விதமாக செய்கிறார்? “நான் கர்த்தர் என்று அறியும் இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்; அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்; அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 24:7).தேவன் தாமே தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாக அவரே கர்த்தர் என்று அறிகிற இருதயத்தை கொடுக்கிறவராக இருக்கிறார். என்ன ஒரு ஆச்சரியமான காரியம் இது. இன்னுமாக “அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்” (எபி 8:10). கர்த்தருடைய வார்த்தையை தம்முடைய மகிமையான செயலின் மூலமாக மனிதனுடைய பொல்லாத இருதயத்தில் உணர்த்துவித்து, அதை விளங்கப்பண்ணி நம் வாழ்க்கையின் பாவ பரிகாரியாக இயேசு கிறிஸ்துவை விசுவாசத்தோடு நோக்கிப்பார்த்து, நம்முடைய பாவங்கள் மனிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாக மாற்றக்கூடிய உன்னதமான பகுதியாக இது இருக்கிறது.“அப்பொழுது நான் அவர்கள் தேவனாயிருப்பேன். அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்” என்று சொல்லுகிறார். தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள உறவை, எப்பொழுதும் ஐக்கியத்தில் இருக்கும்படியாக தேவனே அதை செய்கிறவராக இருக்கிறார். நாம் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு தேவன் பக்கமாக திருப்புவோம். தேவன், நமக்கும் இரட்சிப்பைக் கொடுக்க வல்லவர் என்பதை மறந்துவிடாதே.
free books for download
Sermon Download
Reformed Baptist Church - website
You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.