“கர்த்தர் சியோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அதிரும்; ஆனாலும் கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார்”

(யோவேல் 3:16)  

யோவேல் 3: 10 - 18

10. உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்; பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக.

11. சகல ஜாதிகளே, நீங்கள் சுற்றிலுமிருந்து ஏகமாய் வந்து கூடுங்கள்; கர்த்தாவே, நீரும் அங்கே உம்முடைய பராக்கிரமசாலிகளை இறங்கப்பண்ணுவீராக.

12. ஜாதிகள் எழும்பி யோசபாத்தின் பள்ளத்தாக்குக்கு வருவார்களாக; சுற்றிலுமுள்ள ஜாதிகளை நியாயந்தீர்க்க அங்கே நான் வீற்றிருப்பேன்.

13. பயிர் முதிர்ந்தது, அரிவாளை நீட்டி அறுங்கள், வந்து இறங்குங்கள்; ஆலை நிரம்பியிருக்கிறது, ஆலையின் தொட்டிகள் வழிந்தோடுகிறது; அவர்களுடைய பாதகம் பெரியது.

14. நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஜனங்கள் திரள்திரளாய் இருக்கிறார்கள்; நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது.

15. சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும், நட்சத்திரங்கள் ஒளிமழுங்கும்.

16. கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அதிரும்; ஆனாலும் கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார்.

17. என் பரிசுத்த பர்வதமாகிய சீயோனிலே வாசமாயிருக்கிற நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள்; அப்பொழுது எருசலேம் பரிசுத்தமாயிருக்கும்; அந்நியர் இனி அதைக் கடந்துபோவதில்லை.

18. அக்காலத்தில் பர்வதங்கள் திராட்சரசத்தைப் பொழியும், மலைகள் பாலாய் ஓடும், யூதாவின் ஆறுகள் எல்லாம் பிரவாகித்து ஓடும்; ஒரு ஊற்று கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டுச் சித்தீம் என்னும் பள்ளத்தாக்கை நீர்ப்பாய்ச்சலாக்கும்.

தேவன், தேவனை அறியாத உலகத்து மக்களுக்கும், தன்னுடைய மக்களுக்கும் எவ்விதம் இருப்பார் என்று இங்கு சொல்லப்படுகிறது. உலக மக்களுக்கு கெர்ச்சிக்கிறவராயிருப்பார். தேவனுடைய கோபம் அவர்கள் மேல் தங்கும். தேவனுடைய ஆக்கினைக்கும் தண்டனைக்கும் உரியவர்களாய் அவர்கள் இருப்பார்கள். சிங்கத்தின் கெர்ச்சிப்பு எவ்வளவு பயங்கரமானதாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். தேவனுடைய கோபாக்கினை அவர்கள் மேல் தங்கும் பரிசுத்த கோபத்தால் உண்டாகும் ஆக்கினை இது.

‘ஆனாலும்’ என்ற சிறிய வார்த்தையில் எவ்வளவு ஆழமான பொருள் அடங்கியிருக்கிறது! உண்மைதான், இந்த பயங்கரம், தேவனை மெய்யாலும் அண்டிக் கொள்ளாதவர்களுக்குதான். நீ தேவனுடைய பிள்ளையாயிருப்பாயானால், அஞ்ச வேண்டியதில்லை, கலங்கவேண்டிய அவசியமில்லை. ‘சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்.’ (சங்கீதம். 9 : 9) உன் சிறுமையின் நாட்களில் நீ தேவனிடத்தில் செல். அவர் உனக்கு அடைக்கலமாயிருப்பார். நீ மற்றவர்கள் பார்வையில் சிறுமையாய் காணப்படும் போது, நீ கர்த்தரிடத்தில் செல்லுவாயானால் அவர் மெய்யான அடைக்கலமாயிருப்பார். ‘எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்கு………….உயர்ந்த அடைக்கலமானீர்’ (சங் 59 :16) உன்னுடைய நாட்கள் நெருக்கத்தின் நாட்களாக இருக்கலாம். பவுல் சொல்வது போல எப்பக்கத்திலும் நெருக்கப்படலாம். ஆனால் தேவன் இவ்விதமான வேளைகளில் அடைக்கலமாயிருப்பார்.

அற்பமாய் காணப்படும்போதும், பியோஜனமற்றவன், பியோஜனமற்றவள் என்று சொல்லப்படும் போதும் அவர் தம்முடைய மக்களுக்கு அரனான கோட்டையுமாயிருப்பார். பெலத்த பாதுகாப்பாயிருப்பார். அவருடைய பாதுகாப்பில் நீ சுகமாய் வாழ்ந்து சுகித்திருப்பாய்.

free books for download

The Charismatic Illusion | ஆவிக்குரிய குழப்பங்கள் ஏன் ?

பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை...

Personal Spiritual Life | தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை

நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை நாம் எப்படி...

CHASTISEMENT | தேவ சிட்சை

ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் அனுதினமும்...

The immutability of God’s word | தேவனுடைய மாறாத பிரமாணம்

மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய...

சீஷன் என்பவன் யார்?

சீஷத்துவம் என்பது தேவனுடைய கட்டளை:    ...

ஸ்பர்ஜனின் வாழ்க்கை வரலாறு | Spurgeon’s biography in tamil

சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் (C.H. Spurgeon) 1894 ஆம்...

தேவனுடைய வார்த்தையின் வல்லமை

 தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில்...

மனந்திரும்புதல் என்றால் என்ன?

மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்...

Reformed Baptist Church - website

You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.