‘கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்’
(நகூம் 1 : 3)

எரேமியா 32:37-42

1. நினிவேயின் பாரம். எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புஸ்தகம்.

2. கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்; கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவர், உக்கிரகோபமுள்ளவர்; கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர், அவர் தம்முடைய பகைஞருக்காகக் கோபத்தை வைத்துவைக்கிறவர்.

3. கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; கர்த்தருடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்தூளாயிருக்கிறது.

4. அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகப்பண்ணி, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார்; பாசானும் கர்மேலும் சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும்.

5. அவர் சமுகத்தில் பர்வதங்கள் அதிர்ந்து மலைகள் கரைந்துபோகும்; அவர் பிரசன்னத்தினால் பூமியும் பூச்சக்கரமும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போம்.

6. அவருடைய கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய உக்கிரகோபத்திலே தரிப்பவன் யார்? அவருடைய எரிச்சல் அக்கினியைப்போல இறைக்கப்படுகிறது; அவராலே கன்மலைகள் பேர்க்கப்படும்.

7. கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.

8. ஆனாலும் நினிவேயின் ஸ்தானத்தை, புரண்டுவருகிற வெள்ளத்தினால் சர்வசங்காரம்பண்ணுவார்; இருள் அவர் சத்துருக்களைப் பின்தொடரும்.

9. நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகச் செய்ய நினைக்கிறதென்ன? அவர் சர்வசங்காரம்பண்ணுவார்; இடுக்கம் மறுபடியும் உண்டாகாது.

10. அவர்கள் சன்னபின்னலாயிருக்கிற முட்செடிகளுக்கு ஒப்பாயிருக்கையிலும், தங்கள் மதுபானத்தினால் வெறிகொண்டிருக்கையிலும், அவர்கள் முழுதும் காய்ந்துபோன செத்தையைப்போல எரிந்துபோவார்கள்.

11. கர்த்தருக்கு விரோதமாகப் பொல்லாத நினைவுகொண்டிருக்கிற துராலோசனைக்காரன் ஒருவன் உன்னிடத்திலிருந்து புறப்பட்டான்.

12. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அவர்கள் சம்பூரணமடைந்து அநேகராயிருந்தாலும் அறுப்புண்டுபோவார்கள்; அவன் ஒழிந்துபோவான்; உன்னை நான் சிறுமைப்படுத்தினேன், இனி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன்.

13. இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து, உன் கட்டுகளை அறுப்பேன்.

14. உன்னைக்குறித்துக் கர்த்தர் கட்டளைகொடுத்திருக்கிறார்; இனி உன் பேருக்கு வித்துவிதைக்கப்படுவதில்லை; உன் தேவர்களின் கோவிலில் இருக்கிற வெட்டப்பட்ட விக்கிரகத்தையும், வார்க்கப்பட்ட விக்கிரகத்தையும் நான் நிர்மூலம்பண்ணுவேன்; நீ கனவீனனானபடியால் அதை உனக்குப் பிரேதக்குழியாக்குவேன்.

15. இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது; யூதாவே, உன்பண்டிகைகளை ஆசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து; துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்துவருவதில்லை, அவன் முழுதும் சங்கரிக்கப்பட்டான்.

இந்தவசனம் இரண்டு வித்தியாசமான தன்மைகளைக் கூறுவதுபோல் இருக்கிறது. இன்றைக்கு இந்த சமுதாயத்தில் நீடிய பொறுமை, நீடிய சாந்தமுள்ள மனிதன் ஒரு ஏமாளியாக பெலனற்றவனாக எண்ணப்படுகிறான், பார்க்கப்படுகிறான். ஆனால் இது உண்மையா? இல்லை. உடனடியாக கோபப்படுகிறவனே பலவீனன். அவனால் அவனுடைய சொந்தத் தன்மையை, சுபாவத்தை மேற்கொள்ள முடியாதவனாக இருக்கிறான், ஆனால் நீடிய சாந்தமுள்ளவனோ தன்னுடைய சுபாவத்தை அடக்கக்கூடியவனாக இருக்கிறான். கோபப்படுகிறவன் தன்னுடைய கட்டுபாட்டை இழக்கக்கூடியவனாக இருக்கிறான். ஆனால் நீடிய சாந்தமுள்ளவனோ தன்னை மட்டுமல்ல, அந்த சூழ்நிலையையும் கட்டுப்பாட்டிற்குள்ளாக வைத்துக் கொள்ளக்கூடியவனாக இருக்கிறான். ‘பலவானைப் பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன், பட்டணத்தைப் பிடிக்கிறவனைப் பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன். (நீதிமொழிகள் 16 : 32)

நீடிய சாந்தத்தை பலவீணமாக எண்ணாதேற். அது ஒரு மனிதனில் காணப்படுகிற வல்லமையான கருவியாய் இருக்கிறது. ‘நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்’ (நீதி 15 : 18) எவ்வளவு பெரிய சண்டையாக இருந்தாலும் அதை அமர்த்துகிற வல்லமை அதற்கு உண்டு. வீட்டில் கணவன், மனைவி உறவாக அது இருக்கலாம் அல்லது மற்றவர்களோடு உள்ள உறவாக இருக்கலாம். எந்தவிதமான உறவாக இர்ந்தாலும் நீடிய சாந்தம் என்ற கருவியை நீ உபயோகப் படுத்துவதைக் காட்டிலும் வேறு ஒன்றும் இவ்வித சூழ்நிலையை அமர்த்தமுடியாது.

தேவன் நீடிய சாந்தமுள்ளவர் மாத்திரமல்ல, வல்லமையுள்ளவர். தேவனின் வல்லமையை யார் அளவிட்டுச் சொல்லமுடியும்? வல்லமையும் பராக்கிரமமுள்ள மகாதேவனாகிய எங்கள் தேவனே’ (நெகேமியா 9 : ) இந்த தேவனின் வல்லமைக்கு முன்பாக நிற்பவன் யார்? ஆனாலும் அவருடைய நீடிய சாந்தத்தினிமித்தம் நம்முடைய வாழ்க்கையில் அவர் பொறுமையாய்ச் செயல்படுகிறார் என்பதை மறந்துவிடக் கூடாது.

free books for download

The Charismatic Illusion | ஆவிக்குரிய குழப்பங்கள் ஏன் ?

பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை...

Personal Spiritual Life | தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை

நமக்குள் வாசம் பண்ணுகிற ஆவியானவரை நாம் எப்படி...

CHASTISEMENT | தேவ சிட்சை

ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் அனுதினமும்...

The immutability of God’s word | தேவனுடைய மாறாத பிரமாணம்

மோசே இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த தேவனுடைய...

சீஷன் என்பவன் யார்?

சீஷத்துவம் என்பது தேவனுடைய கட்டளை:    ...

ஸ்பர்ஜனின் வாழ்க்கை வரலாறு | Spurgeon’s biography in tamil

சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் (C.H. Spurgeon) 1894 ஆம்...

தேவனுடைய வார்த்தையின் வல்லமை

 தேவனுடைய வார்த்தை புறகணிக்கப்பட்ட ஒரு காலத்தில்...

மனந்திரும்புதல் என்றால் என்ன?

மனந்திரும்புதலைப் பற்றி நாம் அப்போஸ்தல நடபடிகள்...

Reformed Baptist Church - website

You can browse our church website for more sermons on different topics, tamil christian messages.