பீட்டர் மாஸ்டர்ஸ்
தேவனுடைய பணியில் உங்களது நியாயமான பங்களிப்பு
தேவனுடைய வேலையில் ஒவ்வொரு சபை அங்கத்தவனும் தனிப்பட்ட முறையில் உற்சாகமாக உழைக்க வேண்டும் என்ற கருத்தை, பொதுவாக சுவிசேஷகர்கள் தம் நோக்கிலிருந்து அகற்றி விடுகின்றனர். இன்னும் சில ஊழியர்கள் சபையினரின் பங்களிப்பின் அவசியம் குறித்த கருத்தை தள்ளிவிட முடியாதவர்களாக, அதே வேளை அக்கருத்தை ஏற்று அதை நடைமுறைப்படுத்த விரும்பாதவர்களாக அமைகின்றனர். ஒவ்வொரு அங்கத்தவனின் தாலந்துக்கும், சக்திக்கும் ஏற்ப அவனவனுக்கு பங்களிப்புக்குரிய சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுக்க இந்த ஊழியர்கள் எவ்வித சிறு முயற்சியுமே எடுப்பதில்லை. இந்நிலை தேவனைப் பிரியப்படுத்துமா?