அவர் மேச்சலின் ஆடுகள்  |      ஏப்ரல்  23 

   ‘கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல,
அவரே நம்மை உண்டாக்கினார்;
நாம் அவர் ஜனங்களும்;
அவர் மேச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.’
(சங்கீதம் 100 : 3)

Psalm 100: 3

இயேசுவையல்லாமல் வேறே தேவன் இல்லை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இவர் நம்மை உண்டாக்கினவர் மாத்திரமல்ல, நம்மைத் தெரிந்துக்கொண்டவௌம் அவரே. ;நானே நல்ல மேய்ப்பன், பிதா என்னை அறிந்திருக்கிறது போலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறது போலவும், நான் என்னுடையவைகள் அறிந்தும், என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். நாம் இந்த உலகத்தின் பிள்ளைகளல்ல, அவருடைய பிள்ளைகள். அவருடைய ஆடுகளுமாயிருக்கிறோம். இங்கு ஆடுகளுக்கும் மேய்ப்பனுக்கும் உள்ள நெருங்கிய உறவைப் பாருங்கள். பிதா குமாரனை அறிந்திருக்கிறதூ போலவும், குமாரன் பிதாவை அறிந்திருக்கிறது போலவும், இயேசுவானாவர் தம்முடைய ஆடுகளை அறிந்திருக்கிறேன் என்று சொல்லுகிறார். நீ இந்த நெருங்கிய உறவுக்குள் வந்திருக்கிறாயா? பிதா குமாரன் ஐக்கியத்தின் அளவுக்குள் கிரிஸ்துவோடு உன் ஐக்கியம் இருக்கிறதா?

‘நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்’ (யோவான் 10 11 ) மேப்பனில்லாத ஆடுகள் மிகவும் ஆபத்தில் உள்ளன. கொடிய மிருகங்கள் அவைகளைத் தாக்கிக் கொன்று போடும். பாதுகாப்பு அவைகளுக்கு இல்லை. ஆனால் மேய்ப்பன் உள்ள ஆடுகள், மேப்பனால் வழிநடத்தப்படுகின்றன. கொடிய மிருகங்களிடமிருந்து அவைகள் பாதுகாக்கப்படுகின்றன.

இயேசுவானவர் உனக்கு அவ்விதம் இருக்கிறாரா? அவர் நல்லவர் நல்ல மேய்ப்பனாக உன்னை பாதுகாத்து வழிநடத்துகிறவராக இருக்கிறார் என்று உன்னால் சொல்லமுடியுமா? நீ அவருடைய ஆடாக நான்இல்லை என்று சொல்வாயானால் நீ ஆபத்திலிருக்கிறாய் என்பதை அறிந்துக்கொள். வாழ்க்கையென்ற இந்த கரடுமுரடான பாதையில் வழிக்காட்டியில்லாமல் நீ பிரயாணத்தைத் தொடர துனிகரம் கொள்ளாதே! அவர் இரட்சகராக இருப்பாரானால் ;கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்சியடையேன், அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்’ என்று நீ சொல்லக்கூடும்.