“கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள், உமது யோசனைகள், மகா ஆழமானவைகள்” (சங்கீதம் 92:5).
சங்கீதக்காரன் ஆண்டவருடைய கிரியைகளைக் குறித்து எவ்வளவு மகத்துவமானவைகள் என்று சொல்லும்பொழுது அது ஆழமானது. மெய்யாலுமே ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் ஆண்டவர் செய்திருக்கும் கிரியைகளை எண்ணிப் பார்க்கும்பொழுது அவைகள் எவ்வளவு மகத்துவமானவைகள். உமது யோசனைகள், மகா ஆழமானவைகள். உண்மையாலுமே நமக்கென்று ஆண்டவர் வைத்திருக்கிற அந்த ஆலோசனைகள், யோசனைகள் மிக ஆழமானவைகள். அருமையானவர்களே! ஆண்டவர் உங்களை எவ்வளவு நேசிக்கிறார், அவர் இம்மட்டும் உங்களை வழிநடத்திருக்கிறார் என்றால் அது அவருடைய கிருபை தவிர வேறொன்றும் இல்லை. நீங்கள் மேன்மைபாராட்ட எதுவும் கிடையாது. ஆகவே நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவர் நம்மில் செய்திருக்கிற கிரியைகளை அதிகமாக நாம் நினைவு கூர்ந்து, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோம். அருமையானவர்களே! நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை தோற்றுப்போனதாக இருக்குமானால், நாம் ஆழமாக சிந்திப்பது அவசியம். ஆண்டவரை நாம் பற்றிக் கொண்டிருக்கும்பொழுது, அவருடைய கிரியைகளை எல்லாம் எண்ணிப் பார்க்கும்பொழுது, எவ்வளவு உன்னதமானவைகள். அதுமாத்திரல்ல, வருகிற காலங்களுக்கு நமக்கு என்று வைத்திருக்கிற யோசனைகள் இருக்கிறதே, அந்த ஆலோசனைகள் அவைகள் இன்னும் மகா ஆழமானவைகள். அவைகளை நாம் விளங்கிகொள்வது அவசியம். நம்முடைய வாழ்க்கையில் தேவன் இவ்வளவாய் செய்திருக்கிற இந்த காரியங்களைக் குறித்து நாம் அதிகமாக களிகூருவோம், நன்றி சொல்லுவோம். இதை குறித்து நாம் யோசிப்போம். தேவன் நம்முடைய வாழ்க்கையில் பெரிய காரியங்களை நடப்பிப்பாராக.