“நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்” (ஏசாயா 62:4).

வாழ்க்கையின் நம்பிக்கையின்மை என்பது அனேக வேளைகளில் நாம் கடந்து போகிற ஒரு காரியம். இடத்தில் ஆண்டவர் சொல்லுகிறார் இனி நீ கைவிடப்பட்ட நிலையில் காணப்படமாட்டாய். மேலும் பாழான தேசம் என்று எண்ணின காரியம் மாறிவிடும். நம்முடைய வாழ்க்கையில் நம் சுயத்தை சார்ந்து வாழும் பொழுது அனேக வேளைகளில் தோல்விகளை சந்திக்கிறோம். கைவிடப்பட்ட ஒரு நிலைக்குள் போய்விடுகிறோம். ஆனால் ஆண்டவர் இடத்தில் சொல்கிறார் நீ எப்சிபா என்றும், அதாவது என்னுடைய சந்தோஷம் உன்னில் இருக்கும். பியூலா என்றும் சொல்லப்படும் அதாவது நீ மணவாட்டியாக நீ சொல்லப்படுகிற ஒரு காலம் வரும் என்று சொல்லுகிறார். ஏன் இதை நான் செய்கிறேன் எனச் சொன்னால் கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார். தேவன் என் பேரில் பிரியமாக இருப்பார் ஆனால் அதைவிட மகிழ்ச்சியான காரியம் என்ன இருக்க முடியும். அதோடு கூட ஒரு தேசம் வாழ்க்கைப்படும் என்று சொல்கிறார். வாழ்க்கையை கட்டுகிறவர் கர்த்தர். கர்த்தர் வீட்டை கட்டாராகில் கட்டுகிறவர்களின் பிரயாசம்  விருதா. நம்முடைய வாழ்க்கையை நாம் கட்டி கொள்ளும்படியாக முயலும் பொழுது நாம் அநேக வேளைகளில் தவறிவிடுகிறோம். நம்பிக்கை இழந்து விடுகிறோம். ஆனால் தேவன் சொல்லுகிறார் நான் உன் வாழ்க்கையை கட்டுவேன் என்று சொல்வதின் நிமித்தமாகவே உன் தேசம் வாழ்க்கைப்படும் என்று சொல்லுகிறார். இந்த வாக்குறுதிகளை நிறைவேறுகிற காலம் உண்டு என்பதை விசுவாசியுங்கள் தேவன் பெரிய காரியங்களைச் செய்வார்.