“கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்” (ஏசாயா 61:10).

நம் வாழ்க்கையில் உண்மையாலும் மகிழ கூடிய ஒரு காரியத்தைப் பற்றி இந்த வசனத்தில் நாம் பார்க்கிறோம். உள்ளான ஆத்துமாவில் களிகூருவது போல மேலானது வேறொன்றும் இல்லை. இந்த உலக மகிழ்ச்சி தற்காலிகமானது. இமைப்பொழுதில் மறைந்து விடும். ஆனால் இங்கு தேவனுக்குள் ஆத்துமா களிகூருகிறது என்று சொல்லுகிறார். இந்த சரீரப் பிரகாரமான சந்தோஷத்துக்கும் ஆத்துமாவில் களிகூருவதற்கும் முற்றிலும் முரண்பாடான வித்தியாசமான ஒன்று என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஏனெனில் மணவாளன் தன்னை அலங்கரித்து கொள்ளும்போதும், மணவாட்டி நகைகளினால் தன்னை சிங்காரித்து கொள்ளும்போதும், அந்த வேளையில் அவர்களுடையை சந்தோஷம் எவ்வளவோ மேலானது என்று அறிந்திருக்கிறோம். வாழ்க்கையில் விசேஷமான வேளைகளில் அவர்களுடைய அலங்காரம் மிக சிறப்பானது. இங்கு இந்த இடத்தில் ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒரு தேவனுடைய பிள்ளை இரட்சிப்பில் எவ்விதம்  சந்தோஷப்படுகிறார் என்று வேதம் சொல்லுகிறது. அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார். ஆகவே நான் கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன். பிரியமானவர்களே நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களா? அப்படியானால் இரட்சிப்பின் பூரிப்பும், ஆத்தும மகிழ்ச்சியும் உங்கள் வாழ்க்கையில் இருக்கிறதா? என்று உங்களை ஆராய்ந்து பார்த்து கர்த்தருக்கு ஒப்புகொடுங்கள். அவர் உங்களை இந்த இரட்சிப்பின் சந்தோஷத்தினால் நிரப்புவார்.