உருவழிந்து கொண்டிருக்கும் துதி ஆராதனை

Worship in the melting pot

By Dr. Peter Masters

அத்தியாயம் 1
 உருவழிந்து கொண்டிருக்கும் துதி ஆராதனை:
உண்மையிலேயே துதி ஆராதனையானது இன்றும் உருவழிந்து கொண்டுதானிருக்கிறது. வேதபூர்வமான அஸ்திபாரங்களையே அசைக்கக் கூடிய அளவிலான ஒரு புதிய துதி முறையானது கிறிஸ்தவ ஊழியங்களில் இன்று வேகமாகப் பரவிக்கொண்டு வருகிறது. வேதாகமத்தை நம்பின சபைகளின் வரலாறு முழுவதும் பின்பற்றபட்டு வந்த  துதி ஆராதனை முறைமையானது இந்த காலங்களில் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு வருகிறது. வாலிபர்கள்  ‘‘நாம் ஏன் புதிய ஆராதனை முறையைப் பின்பற்றக் கூடாது? நம் காலத்திற்கேற்ற,  இசைக் குழுக்களின் வழியான துதி முறை  இருப்பதில் என்ன தவறு? அந்த இசைக் குழுக்களிலும் எல்லா விதமான கருவிகளும்  சங்கீதங்களில் கூறப்பட்டுள்ளது போல் ஏன் உபயோகப்படுத்தக்கூடாது ? வேதாகமத்தின் காலத்தில் கூட, துதி ஆராதனைகளில் அவர்கள் நடனமாடவில்லையா? தேவன் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராகத்தானே இருக்கிறார்? நாம் ஏன் தேவனைத் துதிக்கிற முறையில் சோகமான விக்டோரியன் கலாச்சாரத்தினால் கட்டப்பட்டிருக்க வேண்டும்? என்றெல்லாம் கேள்விகள் எழுப்புகிறார்கள்.

உருவழிந்து கொண்டிருக்கும் துதி ஆராதனை(PDF)Click to Download