மறுபிறப்பில் என்ன நிகழ்கிறது?

   ஒரு மனிதனின் மறுபிறப்பில் என்ன நிகழ்கிறது என்பதைக் குறித்து நாம் இந்த சிற்றேட்டின் மூலம் சிந்திக்கலாம்.   யோவான் 3:3ல் “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்று இயேசுகிறிஸ்து நிக்கொதேமுவிடம் கூறுகிறார். அவ்வார்த்தையை சொல்லும்போது அதை அவர் நம் எல்லோருக்குமாக சேர்த்துதான் சொல்லுகிறார். நிக்கொதேமுவுக்கு மாத்திரம் விசேஷமாக அதை அவர் கூறவில்லை. நீங்களும் நானும்கூட மறுபடியும் பிறந்தாலொழிய, தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமுடியாது. மறுபடியும் பிறவாவிட்டால் நாம் இரட்சிக்கப்பட முடியாது; கடவுளின் குடும்பத்தில் பங்குபெற முடியாது, மோட்சத்திற்கும் செல்ல முடியாது. அதற்கு மாறாக நாம் நரகத்திற்குத்தான் போகிறவர்களாக இருப்போம். ஒரு மனிதனின் மறுபிறப்பில் என்ன நிகழ்கிறது என்பதைக் குறித்து நாம் இந்த சிற்றேட்டின் மூலம் சிந்திக்கலாம்.   யோவான் 3:3ல் “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்று இயேசுகிறிஸ்து நிக்கொதேமுவிடம் கூறுகிறார். அவ்வார்த்தையை சொல்லும்போது அதை அவர் நம் எல்லோருக்குமாக சேர்த்துதான் சொல்லுகிறார். நிக்கொதேமுவுக்கு மாத்திரம் விசேஷமாக அதை அவர் கூறவில்லை. நீங்களும் நானும்கூட மறுபடியும் பிறந்தாலொழிய, தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமுடியாது. மறுபடியும் பிறவாவிட்டால் நாம் இரட்சிக்கப்பட முடியாது; கடவுளின் குடும்பத்தில் பங்குபெற முடியாது, மோட்சத்திற்கும் செல்ல முடியாது. அதற்கு மாறாக நாம் நரகத்திற்குத்தான் போகிறவர்களாக இருப்போம்.

    மிகுந்த பக்தி வைராக்கியம் நிறைந்த யூத மதத்தலைவர்களாகிய பரிசேயரில் நிக்கொதேமுவும் ஒருவர். அப்படிப்பட்டவர்களைப் பார்த்துதான் இயேசுகிறிஸ்து, மத் 23:15, 33 ஆகிய வசனங்களில், “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித் திரிகிறீர்கள். அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள். . . சர்ப்பங்களே, விரியன் பாம்புக்குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக் கொள்வீர்கள்?” என்று கூறுகிறார். ஆகவே, நாம் சிந்திக்கும்படி எடுத்துக் கொண்டிருக்கும் இந்த விஷயம் சாதாரணப்பட்டதல்ல, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நித்திய ஜீவனுக்குட்படுவோமா இல்லையா என்பது மறுபிறப்பாகிய இந்த காரியத்தில்தான்அடங்கி இருக்கிறது. 

 

மறுபிறப்பில் என்ன நிகழ்கிறது? (Download PDF)