கிருபை சத்திய தின தியானம்

டிசம்பர் 2                     வழிகளை சிந்தி                     சங் 119:57–64

என் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு,

என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்” (சங் 119:59)

     ஒரு கிறிஸ்தவன் சிந்திக்கிறவனாய் இருக்கவேண்டும். வேதம் அவ்விதமாகவே சொல்லுகிறது. ‘வாசிக்கிறவன் சிந்திக்ககடவன்’. நம்முடைய வாழ்க்கையில் எவ்விதமான சிந்தனைகளை  நாம் கொண்டிருக்கிறோம் என்பது மிக முக்கியம். ஏனென்றால் உன் சிந்தனைகள் எப்படியோ அப்படியே நீ நடக்கிறவனாயுமிருப்பாய். ’தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்.’ (மத் 16: 23). ஆண்டவராகிய இயேசு பேதுருவைப் பார்த்துச் சொன்னவண்ணமாக உங்களைப் பார்த்துச் சொல்லக்கூடுமானால் அது எவ்வளவு வருத்தமானது பாருங்கள்! இன்றைக்கு அநேகரைக்குறித்து அவ்விதம்தான் சொல்லமுடியும். மேலும், பிலிப் 3:19ல் அவர்கள் ‘பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்’ என்று சொல்லப்படுகிறது. அன்பானவர்களே!  உங்கள் சிந்தனைகள் எவ்விதம் இருக்கிறது என்பதை ஆராய்ந்துப் பாருங்கள்.

     தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துக்கொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.’ (சங் 139:23,24). தற்பரிசோதனை ஒரு கிறிஸ்தவன் அவ்வப்பொழுது செய்யவேண்டிய மிக முக்கியமான காரியம். ஏனென்றால் நாம் வழிவிலகிப் போகிறவர்கள். ஒரு தவறான திருப்பம் தொடர்ந்து அந்தத் தவறான பாதையிலேயே நம்மை வழிநடத்திவிடும். மேலே சங்கீதக்காரன் ஜெபித்தப்படி நாம் முழுமனதோடே  ஜெபிப்பது நல்லது. நீ தொடர்ந்து செல்லும் வழி கர்த்தருக்குப் பிரியமான வழியாக இல்லை என்றால்  காலதாமதம் பண்ணாமல் தேவனிடத்தில் செல். ஆண்டவரே என்னை இந்தத் தவறான வழியிலிருந்து திருப்பியருளும். நித்திய வழியில் என்னை நடத்தும் என்று ஜெபி.

     சங்கீதகாரன் சொல்லும் விதமாக ‘ஆண்டவரே என் வழிகளை நான் சிந்தித்து பார்த்து உம்முடைய வார்த்தையின் பக்கம் திரும்ப உதவிசெய்யும்.’ தேவனுடைய வார்த்தை நாம் சரியான பாதையில் நடக்க நமக்கு வெளிச்சம் தரும்