“கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்” (எரேமியா 17:7).

கர்த்தர் மேல் நம்பிக்கையை வைப்பது மிகுந்த நன்மையானக் காரியம். ஆனால் கர்த்தரையே தன் நம்பிக்கையாக கொண்டிருக்கிற வாழ்க்கை அதை விட மிகச் சிறந்தது. அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். அவன் பெறுகிற ஆசீர்வாதத்தைக் குறித்து 8ஆம் வசனத்தில் “அவன் தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்.” ஒருவேளை சூழ்நிலைகள் மிகக் கடினமாக இருக்கலாம், ஆனாலும் அவன் அருமையான ஆவிக்குரியக் கனிகளைக் கொடுக்கிற வாழ்க்கையைக் கொண்டிருப்பான். சூழ்நிலைகளும் மற்ற காரியங்களும் நம்முடைய வாழ்க்கையில் மாற்றதை ஏற்படுத்த முடியாது. ஏனென்றால் அவனுடைய ஒரே குறிக்கோள் தேவன் மாத்திரமே. தேவனை மாத்திரமே அவன் சார்ந்திருக்கிறான். ஆகவே மற்ற காரியங்கள் அவனை அழிக்க முடியாது. அருமையானவர்களே! நாமும் அவ்விதமான ஒரு வாழ்க்கை தேவை என்பதை வாஞ்சிபோம். ஆண்டவரே உம்மேல் மாத்திரமே நம்பிக்கைக் கொள்ள உதவிச் செய்யும் என்று ஜெபிப்போம். நம் சுய புத்தியின் மேல் சாயாமல், நம்முடைய எல்லா வழிகளிலும் அவரைச் சார்ந்துகொள்ளும்போது நிச்சயமாக நம்முடைய வாழ்க்கை ஆசீர்வதிக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.