கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 18                      மெய்யான மனதிரும்புதல்           யோவேல் 2:12–27

‘நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும்

புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில்

திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்’ (யோவேல் 2:12).

     யோவேல் தீர்க்கத்தரிசியின் மூலமாக இஸ்ரவேல் மக்களிடத்தில் கர்த்தர் இவ்விதமாய் பேசினார். இந்த மக்களுடைய வாழ்க்கையில் கர்த்தர் தன் பக்கத்தில் எவ்விதமாக திரும்ப வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார். நம்முடைய உண்மையான ஆவிக்குரிய உபவாசத்தோடும், அழுகையோடும், புலம்புலோடும் மனந்திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஒரு கிறிஸ்தவன் தன் வாழ்க்கையில் எப்பொழுதும் ‘நான் எவ்வளவாய் பின்தங்கி நிலையில் இருக்கிறேனே’ என்று சொல்லி கர்த்தருக்கென்று இன்னும் அதிகமாய் எழும்பி பிரகாசிக்க வேண்டும் என்று வாஞ்சிப்பான்.

     ஆனால் ஒரு சுயநீதிக்காரனுடைய வாழ்க்கையில், தான் எப்பொழுதும் நன்றாக இருக்கிறேன் என்றும், தான் ஒரு இரட்சிக்கப்பட்ட மனிதனாகவும் தன்னை எண்ணிக்கொள்ளுவான். அவனுடைய இருதயத்தில் மேட்டிமையும், பெருமையும் நிறைவாய்க் காணப்படும். அன்பானவர்களே! நம்முடைய வாழ்க்கையில் ஒருக்காலும் இவ்விதமாகக் காணப்படக் கூடாது. கர்த்தர் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்கு திரும்புகள் என்று அழைக்கிறார். கர்த்தர் பக்கமாக நாம் திரும்புவோம். கர்த்தர் நமக்கு கிருபையை காண்பிப்பார். நாம் இருப்பது கிருபையின் காலங்கள். அவருடைய கிருபையை அற்பமாக எண்ணி தேவனை புறக்கணித்துவிடாதே. உன் நிலையை சோதித்தறி.