கிருபை சத்திய தினதியானம் 

மார்ச் 6                 மெய்சமாதானம்              ஆதி 43:1–34

“உங்களுக்குச் சமாதானம்; பயப்படவேண்டாம்;”(ஆதி 43:23)

        யோசேப்பு தன் சகோதர்களைப் பார்த்து சொன்ன இந்த வார்த்தைகள், நமக்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சொன்ன வார்த்தைகளை நினைப்பூட்டுகிறதாக இருக்கிறது. இந்த வசனத்தில் இரண்டு ஆசீர்வாதங்களைப் பார்க்கிறோம், ஒன்று சமாதானம். மற்றொன்று பயமின்மை. இந்த உலகத்தில் எல்லையற்ற ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. ஆனால் இவைகள் எல்லாவற்றையும் இந்த உலகத்தில் கொடுக்கக்கூடியவர் ஒருவர் மாத்திரமே. அவர் இயேசுகிறிஸ்து மாத்திரமே.  யோசேப்பு தன் சகோதர்களைப் பார்த்து சொன்ன இந்த வார்த்தைகள், நமக்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சொன்ன வார்த்தைகளை நினைப்பூட்டுகிறதாக இருக்கிறது. இந்த வசனத்தில் இரண்டு ஆசீர்வாதங்களைப் பார்க்கிறோம், ஒன்று சமாதானம். மற்றொன்று பயமின்மை. இந்த உலகத்தில் எல்லையற்ற ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. ஆனால் இவைகள் எல்லாவற்றையும் இந்த உலகத்தில் கொடுக்கக்கூடியவர் ஒருவர் மாத்திரமே. அவர் இயேசுகிறிஸ்து மாத்திரமே.

        ஆண்டராகிய இயேசுகிறிஸ்து “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” (14:27) என்று சொல்லுகிறார். பயமிருக்குமிடத்தில் சமாதானம் இருக்காது. சமாதானம் இருக்குமிடத்தில் பயமிருக்காது. ஆண்டவாகிய இயேசுகிறிஸ்து அவருடைய சமாதானத்தையே கொடுக்கிறேன் என்று சொல்லுகிறார். இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் கடந்து போன எல்லா நெருக்கங்கள், பாடுகள், சோதனைகள் மத்தியிலே, பிதாவினுடைய சமாதானத்தைக் கொண்டவராக வாழ்ந்தார். அவர் மனிதனாக இருந்தபொழுதும் பிதாவை சார்ந்து அவருடைய சமாதானத்தைக் பெற்றிருந்தார்.

          நம்முடைய வாழ்க்கையில் எப்பொழுது இந்த சமாதானத்தைப் பூரணமாய் கொண்டிருப்போம் என்று சொன்னால், இயேசுகிறிஸ்து கிறிஸ்து எவ்விதம் பிதாவை சார்ந்து கொண்டாரோ அதைப்போலவே கர்த்தராகிய இயேசுவை முழுமையாக நாம் சார்ந்து கொள்ளும்பொழுது மாத்திரமே.  நாம் சமாதானத்தை உருவாக்கிக் கொள்ள முடியாது. நாமே சமாதானத்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்தாலும் கிடைக்காது. ஆனால் தேவன் மாத்திரமே அந்த சமாதானத்தை ஒருவருக்கு கொடுக்கமுடியும். அது பயமில்லாமலும், பூரணமாயும் இருக்கும். உன்னிடத்தில் தேவ சமாதானம் உண்டா?