“அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி” (நெகேமியா 2:4).

நெகேமியா, ராஜ அரண்மைனயில் பானபாத்திரக்காரனாய் இருந்தான். நெகேமியா தன்னுடைய மனதில் தேவனுடைய காரியங்களைக் குறித்த ஒரு கருத்தோடும் எண்ணத்தோடும் ஜாக்கிரதையோடும், அதில் தான் செய்ய வேண்டிய பங்கு உண்டு என்பதை அறிந்தவனாக, ராஜாவை நோக்கிப் பேசுகிறான். அவன் இவ்விதமாய் பேசும்பொழுது, தேவனை நோக்கி ஜெபம் பண்ணி தன்னுடையக் காரியத்தைக் குறித்துச் சொல்லுகிறான். அருமையானவர்களே நாம் நம்முடைய வாழ்க்கையில் எதைச் செய்தாலும் தேவனைச் சார்ந்தவர்களாக நாம் செய்வோமாக. நம்முடைய வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும் நம்மைச் சார்ந்து வாழுகிற வாழ்க்கை இருக்கக் கூடாது. நம்மில் நன்மை என்பது இல்லை. நம் சுயபுத்தியின் மேல் எப்பொழுதும் நாம் சாயக்கூடாது. அது ஆபத்தானது. அநேகருடைய வாழ்க்கையில் தங்கள் சுய புத்தியின் மேல் சார்ந்து வாழுகிறதினால் அநேக்க காரியங்களில் அவர்கள் தோல்வியைக் காண்கிறார்கள். ஆனால் நெகேமியா இந்த இடத்தில் தேவனைச் சார்ந்து ஜெப சிந்தையோடு இந்தக் காரியத்தைச் சொன்னபொழுது, ராஜா அவனுக்குரிய எல்லாக் காரியங்களையும் செய்கிறதை நாம் பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் தேவனைச் சார்ந்து ஜெபத்தோடு செய்யும்பொழுது சகலக் காரியங்களையும் தேவன் நமக்காக வாய்க்கப்பண்ணுவார். நம்முடைய வாழ்க்கையில் மெய்யான தேவனுடைய ஆசீர்வாதத்தைக் காண முடியும். என்ன ஒரு அருமையான முன்மாதிரியை நெகேமியா நமக்கு வைத்திருக்கின்றான்! நாமும் அவ்விதமாக வாழுவோம். தேவனை மகிமைப்படுத்துவோம்.