கிருபை சத்திய தின தியானம்

ஜூலை 5                 கள்ளனின் மனந்திரும்புதல்            லூக்  23 : 32-43

“இயேசுவை நோக்கி ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில்

ரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்”(லூக் 23:42)

     மனந்திரும்புதல் என்பது உள்ளத்தில், இருதயத்தில், மனப்பான்மையில், நோக்கத்தில், சிந்தனையில் செல்லும் திசையில் ஏற்படும்  மாற்றம். நீ மனந்திரும்ப வேண்டுமானால் உன்னுடைய பாவங்கள் அனைத்தையும் பட்டியல் போட்டு ஆண்டவரிடத்தில் மன்னிப்புக் கேட்பதல்ல. மெய்யான மனந்திரும்புதலில், ஆவியானவர் உன்னோடு பேசும்போது நீ  உன்னுடைய பாவங்களை மாத்திரமல்ல. பாவங்களைச் செய்ய காரணமான உன்னைப் பாவியாகக் கண்டு தேவனிடத்தில் மன்னிப்புக் கேட்பதே மனந்திரும்புதல். ஒருசிலர் பட்டியல் போட்டு பாவமன்னிப்பு வேண்டும் என்று ஆண்டவரிடத்தில் ஜெபிப்பார்கள். ஆனால் உள்ளத்திலோ தன்னை ஒரு பாவி என்று உணராமலும் அதைச்செய்யக்கூடும்.

    மெய்யான மனந்திரும்புதல் பரத்தை நோக்கிப் பார்க்கும். கெட்ட குமாரன் தன்னுடைய தகப்பனிடத்தில் திரும்பி வந்தபோது அப்படியாகத்தான் மன்னிப்புகேட்கிறான். தகப்பனே பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன் (லூக் 15:21). இந்த வார்த்தையின் உபயோகத்தைப் பாருங்கள். ‘பரத்துக்கு விரோதமாக’ ஒரு பாவி தேவனுக்கு விரோதமானவன். தேவனுடைய சத்துருவாயிருக்கிறான். தேவனோடு ஒப்புரவாகுவதே மனந்திரும்புதல். தேவனுக்கு பகைஞனாகவும், அவருக்கு எதிராகவும் ஓடிக்கொண்டிருந்தவன் தற்போது தேவனோடு ஒப்புரவாக்கப்பட்ட வாழ்க்கைக்குள்ளாக பிரவேசிக்கிறான். இதுவே மனந்திரும்புதல்.

    இந்தக் கள்ளனைப் பார்த்து ஆண்டவர் ‘இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசியிலிருப்பாய்’ (லூக்கா 23:42) என்றார். நீ மெய்யாலும் மனந்திரும்பியிருக்கிறாயா?