“எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்” (லூக்கா 9:17).

ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர்களும் மற்றவர்களும் அந்த வனாந்திரத்தில் போஷிக்கப்பட்ட காரியத்தைக் குறித்து இங்கு நாம் வாசிக்கிறோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவர்களை வெறுமையாய் அனுப்பிவிட விரும்பவில்லை. நம்முடைய வாழ்க்கையில் நாம் குறைவுபட்டவர்களாய் வாழுவதை தேவன் விரும்புகிறவரல்ல. உண்மையாலுமே நம்மைக் குறித்துப் பரிதாப உணர்வோடு காண்கிற கர்த்தர் நம் குறைவுகளை நிறைவாக்கும்படியாகவே விரும்புகிறார். இயேசு 5 அப்பங்களையும் 2 மீன்களையும் எடுத்து ஆசீர்வதித்துக் கொடுத்தபொழுது, அவர்கள் எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவர் கொடுக்கின்ற காரியங்கள் எப்பொழுதும் மன நிறைவும் திருப்தியும் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த உலகத்தில் நாம் வாஞ்சித்து பெற்றுக்கொள்ளுகிறவைகள் எவ்வளவு பெற்றுக்கொண்டாலும் அதில் நாம் திருப்தியடைய முடிவதில்லை. ஆனால் ஆண்டவர் கொடுக்கின்ற காரியங்கள் நம்முடைய வாழ்க்கையில் நாம் திருப்தியுள்ளவர்களாய் வாழ தேவன் நமக்கு கிருபைச் செய்திருக்கிறார். இது ஒரு மெய்கிறிஸ்தவனில் காணப்படுகிற ஆச்சரியமான ஒரு தன்மை. போதும் என்ற மனதோடுகூடியே தேவ பக்தியே மிகுந்த ஆதாயம். நம்முடைய வாழ்க்கையில் கர்த்தர் கொடுத்திருக்கின்ற அநேக நன்மைகளை எண்ணிப் பார்த்து, ஆண்டவருக்கு நாம் நன்றியுள்ளவர்களாய் காணப்படுகிறோமா என்பதைக் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அவர்கள் அங்கு சாப்பிட்டுத் திருப்தியடைந்தது மாத்திரமல்ல, மீதியானவைகள் பன்னிரண்டு கூடை நிறைய சேர்த்து வைக்கப்பட்டது. அந்த ஒரு திருப்தியை தேவன் நமக்குக் கொடுப்பராக.