தேவனின் மாறாத தன்மை

The Unchanging Nature of God

By C.H. Spurgeon

            “நான் கர்த்தர், நான் மாறாதவர், ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நீர்மூலமாகவில்லை” (மல்கியா 3:6) “நான் கர்த்தர், நான் மாறாதவர், ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நீர்மூலமாகவில்லை” (மல்கியா 3:6) தேவனுடைய தன்மையைப் படிப்பது, ஒரு கிறிஸ்தவனைக் குறித்து சரியாய் அறிந்துகொள்ள நமக்கு பெரிதும் உதவும். ஒரு தேவனின் பிள்ளை படிக்க வேண்டிய உன்னதமான விஞ்ஞானம், மேலான தத்துவம் என்னவென்றால், தேவனுடைய நாமம், தன்மை, ஆள்தத்துவம், அவருடைய செயல்பாடுகளைக் குறித்து அறிந்து கொள்ளுவதே. இது கடலைப்போன்று பரந்த விரிவானது, ஆழமானது. இதைக் குறித்து சிந்திப்பதைப் போல நம்முடைய பெருமையை உடைத்து நம்மை தாழ்மைப்படுத்துவது வேறொன்றுமில்லை. அவ்விதமாக நாம் சிந்திக்கும் பொழுது “மிகப்பெரிய தேவனே நீர் எல்லையற்றவர். நாங்களோ தகுதியற்ற புழுக்கள்” என்று சொல்லுவோம். இந்த சிந்தை நமது இருதயத்தை தாழ்த்தினாலும் அதை விரிவடையச் செய்கிறதாய் இருக்கிறது.  இவ்விதம் தேவனை அடிக்கடி சிந்திக்கிறவன் இந்த குறுகிய உலகத்தைச் சுற்றிவருகிறவனைக் காட்டிலும் அதிக அறிவுள்ளவனாய் இருக்கிறான். தேவனின் இவ்விதமான தன்மையை ஆராய்வது, அவனின் அறிவின் எல்லையை விரிவாக்குகிறது, அவனுடைய முழு ஆள்தத்துவத்தையும் தேவனுக்குள்ளாக பக்தி வைராக்கியமுள்ளவனாக உருவாக்குகிறது. அதே சமயத்தில் இவ்விதமான சிந்தை ஒரு கிறிஸ்தவனுக்கு மிகவும் ஆறுதல் அளிக்கிறதாக இருக்கிறது. அது காயத்தில் சுகமும், துயரத்தில் ஆறுதலும், துக்கத்தில் நம்பிக்கையும் கொடுக்கிறதாயிருக்கிறது. பொங்கி எழும் கடலைப்போன்ற சோதனைகளில் நம்பிக்கை கொடுக்கின்றதாக இருக்கிறது. 

 

தேவனின் மாறாத தன்மை(PDF) – Click to Download