கிருபை சத்திய தின தியானம்

டிசம்பர் 12                    இருக்கிற பெலத்தோடே போ                       நியா 6:1–12

கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி:

பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே  இருக்கிறார் என்றார்” (நியா 6:12)

    இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள். அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியர் கையில் ஒப்புக்கொடுத்தார். ஆகவே இஸ்ரவேலர் அவர்களுக்குப் பயந்து மலைகளிலும், குகைகளிலும் வாழ்ந்து வந்தார்கள். அதுமாத்திரமல்ல மீதியானியரும் அமலேக்கியரும் திரள்கூட்டமாய் வந்து இஸ்ரவேலரின் தேசத்தை அழித்து விளைச்சல்களையெல்லாம் நாசமாக்கிப்போட்டார்கள். இந்த காலக்கட்டத்தில் மீதியானியருக்குப் பயந்தவனாய் கிதியோன் ‘கோதுமையை மீதியானியரின் கைக்குத் தப்புவிக்கிறதற்காக, ஆலைக்குச் சமீபமாய் அதை போரடித்தான். அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமானார்.

     அந்த நேரத்தில் கிதியோன் தன் நம்பிக்கையற்ற தாழ்வு உணர்வை வெளிப்படுத்தினான். ‘ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டு வரவில்லையா? எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச் சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தாரே என்றான்.

    பார்த்து: உனக்கு இருக்கிற இந்த பெலத்தோடே போ: நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்’ (நியா 6 : 14). கிதியோனுக்கு மாத்திரமல்ல, உனக்கும் தேவன் அவ்விதமாகவே சொல்லுகிறார். ‘என்னைப்பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு’ என்று பவுலைப் போல சொல்லி நீயும் எப்பொழுதும் எல்லாவற்றிலும் தேவனைச் சார்ந்து செல். தேவன் உன்னை பெலப்படுத்துவார்.