“அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார்” (ஆமோஸ் 9:12).

அருமையானவர்களே இந்த நாட்களில் ஆவிக்குரிய நிலைகள் விழுந்துபோனதாகக் காணப்படுகிறது. இது மிக வேதனையான ஒன்றாகக் காணப்படுகிறது. ஆனால் ஆண்டவர் சொல்லுகிறார், நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று. நம்முடைய வாழ்க்கையிலும் நாம் கொண்டிருந்த ஆதி அன்பை இழந்திருப்போமென்றால் நாம் மறுபடியுமாக அந்த ஆதி அன்பிற்குத் திரும்புவோம். தேவனுடைய கிருபையினால் அவருக்காக வாழவும் உழைக்கவும் நாம் மறுபடியுமாக கட்டப்படவும் தேவன் நமக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்போம். பூர்வ நாட்களில் கொண்டிருந்த ஆவிக்குரிய தாகத்தை நாம் மறுபடியுமாக புதுப்பித்த நிலையினைப் பெற்றவர்களாகக் கர்த்தருக்கென்று வைராக்கிய வாஞ்சை கொண்டவர்களாய் வாழ அவர் நமக்கு இரக்கம் செய்வாராக. ஆண்டவரே விழுந்துப்போன நிலையை எங்களுக்கு மன்னித்து, எங்களைத் திருப்பிக்கொள்ளும். அப்பொழுது நாங்கள் திரும்புவோம், உம்மோடு கொண்டிருக்கிற உறவை புதுப்பியும், இந்த உலகத்திற்கு நாங்கள் உம்மை வெளிப்படுத்த வேண்டிய மகாப் பெரிய உத்திரவாதத்தை நிறைவேற்ற எங்களுக்குக் கிருபை செய்தருளும் என்று ஜெபிப்போம்.