கர்த்தருடைய வேதத்தின் வல்லமை

எஸ்றா, நெகேமியாவின் புத்தகங்களில் தேவனுடைய வார்த்தையானது எவ்விதமாக ஒரு மனிதனுடைய இருதயத்தை ஆழமாக பாதிக்கும் என்பதை நாம் பார்க்கிறோம். சபையில் எப்பொழுது உயிர்மீட்சி ஏற்படும் என்று சொன்னால், தேவனுடைய வார்த்தையை மையப்படுத்தி அதை உயர்த்தி போதிக்கும்பொழுது மாத்திரமே ஏற்படும். உயிர் மீட்சி என்பது தேவ ஆவியானவர் மரித்துப்போன ஆத்துமாக்களை உயிர்ப்பிக்கும் படியாக செய்கிற செயலாகும். எஸ்றா, நெகேமியாவின் புத்தகங்களில் தேவனுடைய வார்த்தையானது எவ்விதமாக ஒரு மனிதனுடைய இருதயத்தை ஆழமாக பாதிக்கும் என்பதை நாம் பார்க்கிறோம். சபையில் எப்பொழுது உயிர்மீட்சி ஏற்படும் என்று சொன்னால், தேவனுடைய வார்த்தையை மையப்படுத்தி அதை உயர்த்தி போதிக்கும்பொழுது மாத்திரமே ஏற்படும். உயிர் மீட்சி என்பது தேவ ஆவியானவர் மரித்துப்போன ஆத்துமாக்களை உயிர்ப்பிக்கும் படியாக செய்கிற செயலாகும். 

எஸ்றாவின் புத்தகம்:

எஸ்றா பாபிலோனிலிருந்து இஸ்ரவேல் தேசத்திற்கு வருகிறான். “இந்த வர்த்தமானங்களுக்குப்பின்பு, செராயாவின் குமாரனாகிய எஸ்றா, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா அரசாளுகிற காலத்திலே பாபிலோனிலிருந்து வந்தான்” (எஸ்றா 7:1). எஸ்றா ஒரு வேதபாரகன். “கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்” (எஸ்றா 7:10). ஒரு ஊழியன் என்பவன் வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும் வேண்டும். இவை இரண்டும் ஒரு ஊழியனில் காணப்படவில்லையென்றால் அவன் ஊழியத்திற்கு தகுதியற்றவன். 

கர்த்தருடைய வேதத்தின் வல்லமை (Download PDF)