கர்த்தரின் ஓய்வுநாள்

The Lord’s Day

by Dr. David Elangovan

ஓய்வுநாளை புறகணித்த தேசங்களின் நிலை:

    ஓய்வுநாளை புறகணித்த தேசங்களின் நிலை: இன்றைய உலகம் சமூதாய ரீதியிலும், விஞ்ஞான ரீதியிலும் பல முன்னேற்றங்கள் அடைந்திருந்தாலும், நவீனமான பல காரணிகள் காணப்பட்டாலும், ஒழுக்க ரீதியில் இவைகள் அனைத்துமே சீர்கெட்டதாகப் போய்விட்டது. மேற்கத்திய நாடுகளில் ஒரு காலத்தில் தெய்வ பக்தியும், தேவனுக்கேற்ற காரியங்களும் காணப்பட்டன. அப்பொழுது குடும்பங்கள் தேவனால் கட்டப்பட்ட ஸ்தலங்களாகக் காணப்பட்டது. ஆனால் இன்றைக்கு அது முற்றிலும் சீர்குலைத்து போயிற்று. இதற்கு என்ன காரணம்? நான் இரண்டு நாளைக்கு முன்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாடின உரையை கேட்டேன். அப்பொழுது அவர், ‘ஒரு காலத்தில் அமெரிக்க தேசமானது பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற தேவ மனிதரால், சத்தியத்தின் அடிப்படையில் உருவாக காரணமாக இருந்தார்’ என்று குறிப்பிட்டார். அதே போன்று இப்பொழுதும் சபைகளில் சத்தியத்தை ஆதாரமாகக் கொண்டு விளங்க வேண்டும் என்று சொன்னார். அது மிகவும் நல்ல ஒரு காரியம். ஆனால் இப்பொழுது அந்த தேசமானது மிகவும் சீர்கெட்டதாகப் போய்விட்டது. அன்பானவர்களே! மேற்கத்திய நாடுகள் இவ்விதமான நிலைக்கு போனதினுடைய காரணமென்ன? ஒரு காலத்தில் மேற்கத்திய நாடுகளில், அங்குள்ள சிறிய கிராமங்களிலும் தேவனுடைய ஆலயம் மையமாகக் காணப்பட்டது. அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கும், அவருடைய கற்பனைக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதற்கு கீழ்ப்படிந்து வாழுகிற மக்களாய் காணப்பட்டார்கள். ஆனால் பிற்காலத்தில் சமூதாய ரீதியிலும், விஞ்ஞான ரீதியிலும் முன்னேற்றம் அடைந்த பொழுது, பணத்திற்கும், ஆடம்பரத்திற்கும், சிற்றின்பங்களுக்கும், நாகரீகங்களுக்கும் இடம்கொடுத்து எளிய சபையினுடைய சீர்திருத்த அமைப்பைத் தள்ளிவிட்டு, அதனை சீர்குலைய செய்துவிட்டனர்.  மேற்கத்திய நாடுகள் இன்றைக்கு முற்றிலுமாக புறக்கணித்த தேவனுடைய கட்டளை ஓய்வுநாள். அதன் காரணமாக சமுதாயம் சீர்கெட்டது, தேசமும் உருக்குலைந்து போனது. ஆகவே அதிமுக்கியமான கட்டளையான ஓய்வுநாளைக் குறித்து ஒருசில காரியங்களை, வேதத்தின் அடிப்படையில் பார்க்கலாம். 

கர்த்தரின் ஓய்வுநாள் (PDF) – Click to Download