“கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ” (ஆதியாகமம் 12 1).

தேவன் ஒரு அந்நிய தேசத்தில் விக்கிரக ஆராதனை செய்து கொடிருந்த ஒரு மனிதனை அழைக்கிறார். நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ என்று அவனைப் பார்த்து சொல்லுகிறார். அவனும் அவ்விதமாகவே புறப்பட்டு செல்லுகிறதை நாம் பார்க்கிறோம். அருமையானவர்களே நம் வாழ்க்கையில் தேவனுடைய வழிகளை தவறாக எண்ணி விடுகிறோம். ஒருவேளை நான் போக முடியுமா? நான் போவேன் ஆனால் அங்கு வசதிகள் இருக்குமா? என்று ஆராய்ந்து கொடிருக்கிறோம். ஆனால் தேவன் ஆபிரகாமிடத்தில் நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி உன்னை ஆசீர்வதித்து உன் பேரைப் பெருமைப்படுத்துவேன் நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் என்று சொல்லுகிறார். தேவனுடைய கட்டளைகள் நமக்கு பாரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அனேக வேளைகளில் ஆண்டவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய தயங்குகிறோம். ஆனால் அது தவறு. தேவனுடைய சித்தமும் அவருடைய நோக்கமும் நம்முடைய வாழ்க்கையில் அனைத்து காரியங்களையும் உட்படுத்தி தேவன் திட்டமிட்டு செயல்படுத்த செயல்பாடுறார் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இது தேவனுடைய அழைப்பு இல்லாமல் வேறு இல்லை. ஆகவே நான் அதற்கு கீழ்ப்படிவேன் என்று சொல்வதைப்போல ஆசிர்வாதம் வேறில்லை. ஆண்டவர் நமக்கு என்று கொண்டிருக்கிற திட்டங்கள் மேலானது. அதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆபிரகாம் எவ்வளவாய் அசீர்வதிக்கப்பட்டார் என்பதை வேதபுத்தகம் முழுவதுமாக நமக்கு தெளிவுபடுத்துகிறது. என்ன ஒரு ஆச்சரியமான தேவன். அவரை விசுவாசித்து அவருக்கு கீழ்ப்படிவோமாக. கர்த்தர் நம்மை உயர்த்துவார்.