“மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்” (பிரசங்கி 1:2).

சாலமோன் தன்னுடைய வாழ்க்கையில் இந்த உலகத்தின் எல்லாக் காரியங்களையும் அனுபவித்த ஒரு மனிதன். ஆனால் கடைசியில் அவன் சொன்னது “மாயை, மாயை, எல்லாம் மாயை” என்று. ஆனால் இன்றைக்கு எதனை பேர் இந்த மாயையைப் பற்றிக் கொள்ளப் பிராயசப்படுகிறார்கள்? சாது சுந்தர் சிங்குடன் ஒரு வாலிபன் இமய மலையில் நடந்துசென்றான். அந்த வாலிபன் தண்ணீர் தாகத்தினால் நாவு வறண்டுபோன பொழுது, கானல் நீரைப் பார்த்து அதின் அருகில் செல்ல வேகமாய் ஓடினான். ஆனால் சிறிது தூரம் சென்று கீழே விழுந்து மரித்துப்போனான். அருமையானவர்களே! இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கை அவ்விதமாகவே இந்த மாயைப் பின்பற்றி ஓடுகிற ஒரு ஓட்டமாகவே காணப்படுகிறது. ஒருவேளை உங்களுடைய வாழ்க்கை அவ்விதம் இருக்குமானால், இப்பொழுது தேவன் தம்முடைய கிருபையினால் உங்களை அழைக்கிறார். மாயையைப் பற்றிக்கொண்டு கிருபையைப் போக்கடித்தார்கள் என்று வேதத்தில் பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு கிருபையை தேவன் கொடுக்கிறார். ஆனால் எத்தனை மக்கள் இந்தத் தருணத்தை தங்கள் வாழ்க்கையில் உபயோகப்படுத்திக்கொள்ளுகிறார்கள்? இன்றே தேவன் பக்கமாகத் திரும்புங்கள். உங்கள் வாழ்க்கையில் கானல் நீரைத் தொடர்வதினால் ஒருநாளும் வெற்றி பெற முடியாது. தேவன் நித்தியத்தைக் குறித்த சிந்தையை நம்முடைய மனதில் வைப்பராக. மாயையை விட்டு கிருபையைப் பற்றிக்கொள்ளுவோம்.