ஜெபத்தின் தங்க திறவுகோல்

The Golden Key of Prayer

By C.H. Spurgeon

 

        “என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்” (எரேமியா 33:3)

        இந்த வார்த்தையானது எரேமியா இருண்ட சிறையில் அடைபட்டிருந்த போது, தேவனால் கொடுக்கப்பட்டது. ஒரு சிறைச் சாலையில் அடைபட்டிருந்த தேவ ஊழியனுக்கு, இது மகிழ்ச்சியையும் நம்பிக்கையின் பிரகாசத்தையும் கொடுக்கிறதாயிருந்தது. உன்னதமாக எழுதப்பட்ட அநேக புஸ்தகங்கள் சிறைச் சாலையில் இருந்து உருவானவைகளாய் இருந்திருக்கின்றன. மிகச்சிறந்த உதாரணமாக ஜான் பனியனின் “மோட்ச பிரயாணத்தை” நாம் சொல்லக் கூடும்.

      தேவனுடைய மக்கள் தங்களுடைய இக்கட்டான வேளைகளில் தேவனின் மிகச்சிறந்தவைகளைக் கண்டிருக்கின்றார்கள். தேவன் எப்பொழுதும் நல்லவராகவே இருக்கிறார். ஆனாலும் தம்முடைய மக்களின் இருள் சூழ்ந்த காலங்களில் அவர் மிகச்சிறந்தவைகளை வெளிப்படுத்துகிறார். உபவத்திரவம் என்கிற கடலில் மூழ்குகிறவர்கள் விலையேறப்பெற்ற முத்துக்களை எடுத்து வருபவர்களாய் இருந்திருக்கின்றார்கள். நமக்கு உபவத்திரவங்கள் பெருகுகையில் அவருடைய ஆறுதலும் கிறிஸ்துவுக்குள் நம்மில் பெருகுகிறதாய் இருக்கிறது. இருண்ட சிறையில் அடைபட்டிருக்கின்ற தேவனுடைய பிள்ளைகள் மகிழ்ச்சியான இந்த வார்த்தையைக் கேட்பார்களாக. பாரப்பட்ட இருதயமும் இந்த மெல்லிய தேவனின் சத்தத்தை கேட்கட்டும். இந்த வசனத்தை மூன்று பகுதிகளாக பேசவும், தேவ ஆவியானவர் தாமே இந்த சத்தியத்தை விளங்கப்பண்ணவும் உதவி செய்வாராக.

 

ஜெபத்தின் தங்க திறவுகோல் (PDF) – Click to Download