தேவனுடைய வார்த்தையின் மகத்துவங்கள்

தேவனுடைய வார்த்தையை உயர்த்திக் காண்பித்த தேசங்கள் இன்றைக்கு அதை அற்பமாக எண்ணி புறம்பாக்கிப் போட்டது. முக்கியமாக ஜெர்மெனியில்  தான் சீர்திருத்தம் ஆரம்பித்தது, ஆனால் முதலாவது வேதத்தில் சந்தேகத்தை கிளப்பிய நாடு ஜெர்மனிதான். சீர்திருத்தத்தின் பிறப்பிடமாக இருந்த ஜெர்மனி இன்றைக்கு அரசு அங்கீகாரம் பெற்ற விபசாரத்தின் மையமாக மாறிப்போயிற்று.  இங்கிலாந்தில் ஒரு காலத்தில் அரசவையில் வேதத்தை மையப்படுத்தி அரசாங்கம் நடைபெற்றது, ஆனால் இன்றைக்கோ அதுவும் வேதத்தை புறக்கணித்து களியாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. அமெரிக்காவிலும் இதே நிலைதான்.  தேவனுடைய வார்த்தையை உயர்த்திக் காண்பித்த தேசங்கள் இன்றைக்கு அதை அற்பமாக எண்ணி புறம்பாக்கிப் போட்டது. முக்கியமாக ஜெர்மெனியில்  தான் சீர்திருத்தம் ஆரம்பித்தது, ஆனால் முதலாவது வேதத்தில் சந்தேகத்தை கிளப்பிய நாடு ஜெர்மனிதான். சீர்திருத்தத்தின் பிறப்பிடமாக இருந்த ஜெர்மனி இன்றைக்கு அரசு அங்கீகாரம் பெற்ற விபசாரத்தின் மையமாக மாறிப்போயிற்று.  இங்கிலாந்தில் ஒரு காலத்தில் அரசவையில் வேதத்தை மையப்படுத்தி அரசாங்கம் நடைபெற்றது, ஆனால் இன்றைக்கோ அதுவும் வேதத்தை புறக்கணித்து களியாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. அமெரிக்காவிலும் இதே நிலைதான்.  தேசங்கள் என்றைக்கு வேதத்தைப் புறக்கணித்து சுய இச்சைகளுக்கு திரும்பினதோ அது அப்பொழுதுதே சீர்கெட்டதாகப் போய்விட்டது. தேவனுடைய வார்த்தைக்குரிய கனத்தை செலுத்தி அதன்படி செய்யும்பொழுது தேவனை மகிமைப்படுத்துகிறோம். வேதம் முழுவதுமாக கடவுள் தம்முடைய வார்த்தையை அருளியுள்ளார். ஆகவேதான் பவுல், “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது” (2தீமோ 3:16) என்று சொல்லுகிறார். எங்கு தேவனுடைய வார்த்தை சந்தேகிக்கப்படுகிறதோ அங்கு வீழ்ச்சியைப் பார்க்கிறோம். இன்றைக்கு கிறிஸ்தவ நாடு என்று  எந்த நாட்டையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. கிறிஸ்தவ நாடுகள் என்று சொல்லிகொண்டிருந்த மேற்கத்திய நாடுகள் இன்றைக்கு புறஜாதி நாடுகளை விட மோசமான நிலைக்குள் சென்றுவிட்டது. ஆகவே தேவனுடைய வார்த்தையின் மகத்துவங்கள் என்ன  என்பதை பார்ப்போம். 

தேவனுடைய வார்த்தையின் மகத்துவங்கள் (Download PDF)