வேத சத்தியத்திற்கான போராட்டங்கள்

பொதுவாக நாம் இந்த வேத சத்தியத்தை அறிந்திருப்பது மட்டும் போதாதது, அந்த சத்தியத்தை அறிந்துகொண்டு அதன்படி நடக்கவும், உபதேசிக்கவும், இந்த சத்தியத்திற்காக போராடவும் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். இது நம்மேல் விழுந்த நம் ஒவ்வொருவருடைய கடமையாக இருக்கிறது. இந்த வேதத்தில் எவ்விதமாக தேவனுடைய மனிதர்கள் இந்த சத்தியத்திற்காக போராடினார்கள் என்பதைப் பற்றி ஒரு சிறிய பகுதியை இந்த கையேட்டில் பார்ப்போம். பொதுவாக நாம் இந்த வேத சத்தியத்தை அறிந்திருப்பது மட்டும் போதாதது, அந்த சத்தியத்தை அறிந்துகொண்டு அதன்படி நடக்கவும், உபதேசிக்கவும், இந்த சத்தியத்திற்காக போராடவும் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். இது நம்மேல் விழுந்த நம் ஒவ்வொருவருடைய கடமையாக இருக்கிறது. இந்த வேதத்தில் எவ்விதமாக தேவனுடைய மனிதர்கள் இந்த சத்தியத்திற்காக போராடினார்கள் என்பதைப் பற்றி ஒரு சிறிய பகுதியை இந்த கையேட்டில் பார்ப்போம்.

சத்தியத்திற்காக போரடும்படிக்கு வேதம் நம்மை அழைக்கிறது:

வேதத்தில் யூதா நிருபம் மற்றெல்லா நிருபங்களைப் பார்க்கிலும் சற்று வித்தியாசமானதாக இருக்கிறதை நாம் பாக்கிறோம். இந்த நிருபமானது ஆவிக்குரிய போராட்டத்தின் மத்தியில் வாழும்படியான வாழ்க்கை முறையை சுட்டிக் காண்பிக்கிறது. முதலாவது வசனத்தில் “இயேசு கிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசு கிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது” (யூதா 1:1) என்று ஆரம்பிக்கிறார்.

 

வேத சத்தியத்திற்கான போராட்டங்கள் (Download PDF)