கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 29       பார்வையடைந்த குருடன்     மாற்கு 10 : 46 –52

‘அதற்கு அந்தக் குருடன்: ஆண்டவரே, நான் பார்வையடைய வேண்டும்’ என்றான் (மாற்கு 10 : 51)

 இவ்வளவு நாட்க்களக பர்திமேயு குருடனாக, தன்னுடைய பிழைப்புக்காக, சந்தித்த மக்களிடம் பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான். இந்த நாள் மட்டும் அவன் மனிதர்களையே சந்தித்தான். எந்த மனிதனிடமாகிலும் என் கண்களை சுகப்படுத்தும் என்று அவனால் கேட்க்கமுடியுமா, முடியாது. எந்த ஒரு மனிதனாலும் பார்வையை அவனுக்குக் கொடுக்கவும் முடியாது, ஆனால் இந்தக் குறிப்பிட்ட நாளில், அவன் சந்தித்தவர் மனிதனல்ல, தேவாதி தேவனை சந்திக்கிறான். அவன் அவரிடத்தில் பிச்சைக்கேட்க்கவில்லை, பார்வையைக் கேட்டான். அவ்விதமாகவே பார்வையைப் பெற்றுக்கொண்டான். இந்தப் பர்திமேயுவின் ஞானத்தைப்பாருங்கள். இன்றைக்கு அநேகர் பழைய பர்திமேயுவைப் போலவே இருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியது கொஞ்சம் காசு, அதாவது இந்த உலகத்தின் அற்பப் பணம், பொருள், கொஞ்சக்காலம் அனுபவிக்கக்கூடைய காரியங்கள். அவர்கள் அதில் திருப்தியடைந்து விடுகிறார்கள். அன்பான நன்பரே! உன்னுடைய வாழ்க்கை அப்படிதான் இருக்கிறதா? இந்த உலக அளவிலும் காரியத்திலும் திருப்த்தியடைந்து விடுகிறீர்களா? இதற்காகவே ஜீவிப்பது போதும் என்று எண்ணுகிறீர்களா?

 ஆனால் தற்போது பர்திமேயு சந்தித்தவர் தேவாதி தேவன். அதை உணர்ந்த பர்திமேயு ‘ஆண்டவரே நான் பார்வையடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். நாமும் கூட இந்த உலக அளவில் ஜீவிப்பதை விட்டு நம்முடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படவேண்டும் என்று வாஞ்சிக்க வேண்டும் நமது ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படவில்லையென்றால் நாமும் ஆவிக்குரிய குருடர்களாகவே மரித்துப்போவோம். அதனால் என்ன பிரயோஜனம்! பர்திமேயு குருடன் கீழானவகளை கேட்டுக்கொண்டிருந்தான். ஆனால் இப்போதோ மேலானவைகளைக் கேட்டான். நாமும் கூட  இயேசுவினிடத்தில் கீழானவைகளை அல்ல, மேலானவைகளைக் கேட்ப்போம். அப்பொழுது நம்முடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டு தேவனுடைய மகத்துவமான உன்னத காரியங்களைக் காணலாம். இந்த நாள் மட்டும் குருடராயிருந்த நாம், தேவ ஒளி பெற்று பர்திமேயுவைப் போல இயேசுவைப் பின்பற்றுவோம்.