பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்ய ஆரம்பித்த நாள் முதல், புதிய ஏற்பாட்டு
சபையின் 2000 ஆண்டுகள் முடிகிற நிலையில், சாத்தானுக்கும் சபைக்குமிடையே தொடர்ந்து பலவிதமான போர் நடந்து கொண்டிருக்கிறது. பிசாசு வெளியிலிருந்து சரீரப் பிரகாரமாக
தாக்குதலைத் தொடுக்கிறது மாத்திரமல்ல, சுவிசேஷத்தின் வல்லைமையைக் குறைக்கும்படியாக சபைக்குள்ளும் பலத்த
கிரியை நடப்பிக்கிறதை பார்க்கிறோம். என்றாலும், ஜீவனுள்ள கற்களான உண்மையான விசுவாசிகளைக் கொண்ட சபையானது வெற்றியுடன் வளர்ந்தே வந்திருக்கிறது.சபை சரித்திரம் முழுவதும் மாறாத, ஜீவனுள்ள வசனத்தினாலே மட்டும் தொடர்ந்து புத்துயிர் பெற்று, இப்படிப்பட்ட வெற்றிகளைப் பெற்ற அத்தியாயங்களால் சபை முழுவதும் நிறைந்துள்ளது. இப்படிப்பட்ட ஆவிக்குரிய எழுச்சியும், உண்மையான வளர்ச்சியும் நாம் இப்பொழுது கேள்விப்படுகின்ற “அடையாள எழுச்சி உபதேசங்களால்” சபைக்கு ஏற்பட்டதென்று நிச்சயமாக கூற முடியாது.
பெந்தகோஸ்தே இயக்கம் 19-ம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட முதல் ஐம்பது ஆண்டுகள் வரை ஒரு குறுகிய அளவிலான இயக்கமாகவே இருந்து வந்தது. 1955-ம் ஆண்டு வரையிலும் இந்த வகை “அடையாள எழுச்சி உபதேசங்கள்” (Charismatic Teaching) பெந்தகொஸ்தே சபைகளில் இடம் பெறவில்லை என்றே ச ொல்லலாம். புதிய ஏற்பாட்டு சபையின் இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றில், கடந்த 40 ஆண்டுகளாக தான் இத்தகைய அடையாள மற்றும் எழுச்சியை மட்டுமே

ஆவிக்குரிய குழப்பங்கள் ஏன்?
சார்ந்த உபதேசங்கள் வழக்கத்தில் உள்ளன. இந்தப் போதகங்கள் கடந்த நூற்றாண்டுகளில் சபையில் நடந்து வந்துள்ள ஊழியங்களை, அனலற்ற, எழுச்சியில்லாத, வல்லமையில்லாத, முழுவதும் வெளிச்சம் பெறாத ஊழியங்கள் என்றும், இதுவரை ஏறெடுக்கப்பட்டஆராதனைகள் உண்மையில்லாத
ஆராதனைகள் எனவும் அதிபயங்கரமாக வர்ணிக்கப்படுகிற அளவிற்கு சென்றுள்ளன.