வேதாகமம் மெய்யாலும் தேவனுடைய வார்த்தைதானா?

 

பதில்:

            வேதமானது ஏறக்குறைய 1500 ஆண்டு  காலத்தில் தேவன் தம்மை படிப்படியாக வெளிப்படுத்தினது. தம்முடைய அன்பின் நிமித்தமாக தன்னை வெளிப்படுத்தும்படியாக தேவன் தம்முடைய வார்த்தையை கொடுத்திருக்கிறார்.  2 தீமோத்தேயு 3: 15, 17ல் பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது   ‘கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.’ என்று சொல்லியிருகிறார்.

                   வேதமானது தேவனுடைய வார்த்தை என்பதை உள்ளான நிரூபணங்களையும் வெளியான நிரூபணங்களையும் கொண்டிருக்கிறது. உள்ளான நிருபணங்கள் என்று சொல்லப்படும் வேளையில் வேதாகமத்தின் 66 புத்தகங்களை மூன்று கண்டங்களில் இருந்த மக்கள் மூன்று மொழிகளில் ஏறகுறைய 1500 ஆண்டுகள் இடைவெளியில் 40 ஆசிரியர்கள் எழுதியிருந்தாலும்கூட வேதாகமத்தில் எந்தவிதமான  முரன்பாடான காரியத்தை பார்க்கமுடியவில்லை. எல்லாவற்றிலும் ஒற்றுமையைப் பார்க்கிறோம். அடுத்ததாக வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிற அநேக தீர்க்கதரிசனங்கள் தேசங்களைக்குறித்தும் மனிதர்களைக் குறித்தும் இன்னும் பலவற்றை குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறன. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப் பற்றி 300க்கும் மேற்பட்ட தீர்க்கதரிசனங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவைகள் அவருடைய பிறப்பைக்குறித்தும் மரணத்தைக்குறித்தும் உயிர்த்தெழுதலைக்குறித்தும் சொல்லப்பட்டிருக்கின்றன. இவைகள் எவ்விதம் துள்ளியமாக நிறைவேறி இருக்கின்றன என்றும் நாம் அறிந்திருக்கிறோம். மூன்றாவதாக இதனுடைய வல்லமையும் அதிகாரமும். தேவனுடைய வார்த்தை அநேக கோடிக்கணக்கான மக்கள் வாழ்க்கையை மாற்றியிருக்கின்றது,தொடர்ந்து மாற்றிவருகிறது. பயங்கரமான பாவத்தின் அடிமைகள் வேதாகமத்தின் மூலமாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். அடுத்ததாக சரித்திரபூர்வமான நிருபணங்கள், இவைகள் மெய்யாலுமே தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்கிறது.  புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் வேதாகமம் சரித்திரப்பூவமாக நடந்த சம்பவங்களை கொண்டதாக இருக்கிறது என்பது இன்றைக்கும் நிருபிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒளிவுமறைவு இல்லாதபடிக்கு பெரிய தேவ மனிதர்கள் என்று சொல்லப்படுகிறவர்களின் பாவத்தைக் குறித்தும், அவர்களுடைய வீழ்ச்சியைக் குறித்தும் எந்தவிதத்திலும் மறைக்காமல் எழுதப்பட்டிருக்கிற தேவனுடைய நீதியான அளவை வெளிப்படுத்துகிறதாக இருக்கிறதை நாம் பார்க்கிறோம். கடைசியாக பார்க்கும்பொழுது இந்த வேதாகமத்தை அழிக்கும்படிக்கு எத்தனையோ ராஜாக்கள், அரசாங்கங்கள், மனிதர்கள் எழும்பி எவ்வளவோ பிரயாசப்பட்டார்கள்,ஆனால் வேதாகமத்தை அழிக்கமுடியவில்லை. தேவன் தம்முடைய வல்லமையினால் அதை பாதுகாத்துவருகிறார். இன்றைக்கும் பல கலாச்சாரங்கள், தேசங்களிலும் தேவனுடைய வார்த்தையின் பாதிப்பை நாம் பார்க்கமுடிகிறது. ஆகவே தேவன்  ஆச்சரியமான விதமாக தம்முடைய வார்த்தையை பாதுகாத்து மனிதனுக்குக் கொடுத்துவருகிறார். ஆகவேதான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சொன்னார் மாற்கு 13 : 31ல்  வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை ‘ இவ்விதமான காரியங்களை நாம் பார்க்கும் பொழுது மெய்யாலுமே வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்பதைப் நாம் பார்க்கமுடிகிறது. ஆகவே வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்பதை அறிந்திருக்கிறோம்.