டிசம்பர் 23                                             

நான்  உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக்காட்டுவேன்; உன்மேல் என் கண்ணைவைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங் 32 : 8)

                தேவன் வேதத்தில் அநேக விலையேறபெற்ற வாக்குத்தத்தங்களை கொடுத்திருக்கிறார். நான் விசுவாசத்தோடு அவைகளைப் பற்றிக்கொள்ளவும் அவைகளுக்காக ஜெபிக்கவும் வேண்டும். மேலே பார்க்கும் வாக்குத்தத்தில் தேவன் நமக்கு போதிக்கிறேன் என்று சொல்லுகிறார். தேவாதி தேவன் நமக்குப் போதிப்பது எவ்வளவு மேன்மையானது. ஆம்! தேவன் தம்முடைய வார்த்தையைக் கொண்டு நமக்குப் போதிக்கிறார். சங்கீதக்காரன் இதற்கு சாட்சியாக இவ்விதம் சொல்லுகிறார். தேவனே, என் சிறுவயது முதல் எனக்குப் போதித்து வந்தீர். சங் (71:17)

                தேவனுடைய ஆலயத்தில் பிரசங்கிக்கப்படும் தேவனுடைய வார்த்தையின் மூலம் தேவன் நமக்குப் போதிப்பார். ‘திரளான ஜனங்கள் புப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார். நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்.’ (ஏசாயா 2:3). நீ தேவனுடைய ஆலயத்துக்குப் போகும்போது இந்த மக்களைப்போல ‘அவர் தமது வழிகளைப் போதிப்பார்’ என்ற எதிர்ப்பார்ப்போடே போகிறாயா? இன்றைக்கு அவ்விதம் தேவ ஆலயத்திற்குச் செல்லாததினால் அவர்கள் இவ்விதமான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதில்லை. நீ ஓய்வு நாட்களில், மற்றும் வேத ஆராய்ச்சி கூட்டங்களிலும் , ஜெபக்கூட்டங்களிலும் பங்குபெறும்போகும்போது ‘கர்த்தாவே உம்முடைய வார்த்தைகள் மூலம் எனக்குப் போதித்தருளும்’ என்று ஜெபித்துச் செல். தேவன் நிச்சயமாக உன் ஆத்துமாவின் தேவையைச் சந்திப்பார். உனக்குத் தேவையான ஆவிக்குரிய சத்தியத்தையும், வழி நடத்துதலையும் கொடுத்து உன்னைப் போதிப்பார். மெய்யான தேவ ஆசீர்வாதத்தோடு தேவ ஆலயத்தை விட்டு நீ வருவாய். அவனுடைய தேவன் அவனை நன்றாய் போதித்து, அவனை உணர்த்துகிறார் (ஏசாயா 28:26). தேவன் உன்னுடைய அநுதின காரியங்களைக் குறித்தும் உனக்குப் போதித்து உன்னை உணர்த்துவார்.