“அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்” (மத்தேயு 15:26).

இயேசு கிறிஸ்து எங்கே இவ்விதமாக நாய்க்குட்டிகள் என்பதாக குறிப்பிட்டு பேசுவது கடினமாக காணப்படுவதைப் போல இருக்கிறது. ஆனால் இந்த இடத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யூத வழக்கத்தின் முறையை வெளிப்படுத்துகிறார். ஆனால் அவளுடைய பதிலை பாருங்கள்: அதற்கு அவள் மெய்தான் ஆண்டவரே ஆகிலும் நாய் குட்டிகள் தங்கள் எஜமானர்களின் மேசையிலிருந்து விழும் துணிக்கைகளை திண்ணுமே என்றாள். எங்களுக்கும் அதில் ஒரு பங்கு இதில் இருக்கிறது என்பதைக் குறித்து அவள் தாமே பேசுவதை பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் நமக்கு எதிரிடையாக சூழ்நிலைகள் இருந்தாலும், நாம் நம்மை தாழ்த்தி கொள்வோம். நம்முடைய உண்மை நிலையை ஒத்துக்கொள்வோம். அது எப்பொழுதும் தவறு இல்லை. இந்த ஸ்திரீயானவள் அந்த காரியத்தை சொன்னபொழுது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவளைக் குறித்து சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக ஸ்திரீயே உன் விசுவாசம் பெரிது நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமடைந்தாள். என்ன ஒரு ஆச்சரியமான காரியம். இங்கு இடத்தில் இரட்டிப்பான ஆசீர்வாதத்தை பார்க்கிறோம். அவளுடைய விசுவாசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் அவளுடைய மகளும் சுகம் பெற்றாள். நம்முடைய வாழ்க்கையில் எப்பொழுதும் காரியங்கள் உடனடியாக நடைபெற வில்லையே என்று நாம் அனேக நேரங்களில் சோர்ந்து விடுகிறோம். ஆனால் நாம் விசுவாசிக்கிற ஆண்டவர் எவ்வளவு உன்னதமானவர் என்பதை இந்த ஸ்திரீயின் மூலமாக வெளிப்படுத்துகிறதை நாம் பார்க்கிறோம். கர்த்தருக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். அவர் நம்மை அருமையான பாதையில் நம்மை வழி நடத்துவார்.