கிருபையினால் மாத்திரமே இரட்சிப்பு

Salvation by Grace alone

By Bro. Krishanthan

 

          கிருபையினால் மாத்திரமே இரட்சிப்பு என்று வேதம் சொல்லுகிற சத்தியத்தை யோவான் எழுதின சுவிசேஷம் நான்காம் அதிகாரத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு இந்த சிற்றேட்டில் பார்க்கலாம். கிருபையினால் மாத்திரமே இரட்சிப்பு என்று வேதம் சொல்லுகிற சத்தியத்தை யோவான் எழுதின சுவிசேஷம் நான்காம் அதிகாரத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு இந்த சிற்றேட்டில் பார்க்கலாம். இயேசு எதற்காக இந்த உலகத்தில் வந்தார்? யோவான் நான்காம் அதிகாரத்தில் இயேசுகிறிஸ்து தான் எந்த நோக்கத்திற்காக வந்தாரோ அதை நிறைவேற்றுதைப் பார்க்கிறோம். அவர் இந்த உலகத்தில் எதற்காக வந்தார்? சமுதாய சீர்த்திருந்தங்களை கொண்டுவரவா? சட்டதிட்டங்களை மாற்றுவதற்காகவா? அல்லது வேறு எதற்காக வந்தார்? இயேசு: “பாவிகளை இரட்சிக்க வந்தேன்” என்று வேதத்தில் சொல்லுகிறதை பார்க்கிறோம். பவுல் இயேசுவைக் குறித்து சொல்லும்பொழுது, “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்” (1 தீமோ 1:15) என்று சொல்லுகிறார். அதுமட்டுமல்ல, இயேசுகிறிஸ்து தம்முடைய வார்த்தையின் மூலமாக, “ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்” (யோவான் 12:47) என்று சொல்லுகிறார். அப்படியானால், இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வந்த நோக்கம் “இரட்சிப்பு”. ஆகவேதான், அவர்: “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” (யோவான் 10:10) என்று சொல்லுகிறார். 

 

கிருபையினால் மாத்திரமே இரட்சிப்பு(PDF) – Click to Download