தேவனைத் துதியுங்கள்

Praise The Lord

by Dr. David Elangovan

 

        “பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்” (சங்கீதம் 100:1). “பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்” (சங்கீதம் 100:1). அன்பானவர்களே! இந்த வருடத்தை நாம் நிறைவு செய்து, புதிய ஆண்டிற்குள் பிரவேசித்திருக்கிற வேளையிலே உங்களுடைய இருதயங்களில் இந்த உண்மையான சந்தோஷம் இருக்கிறதா? கர்த்தரை தனிப்பட்ட விதத்தில் அறிந்திருப்பது எவ்வளவு ஒரு சிலாக்கியமான காரியம். கர்த்தரை நாம் தனிப்பட்ட விதத்தில் அறிந்திராத வரைக்கும், நாம் நிச்சயமாக சந்தோஷமான இந்த கெம்பீரமான சத்தத்தை நம்மால் ஏற்படுத்த முடியாது. கர்த்தரை தனிப்பட்ட விதத்தில் அறிந்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒருவேளை உங்கள் வாழ்க்கையை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடாமல் இருப்பீர்களானால், இதுவே ஏற்றவேளையாக இருக்கிறது உங்களை கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கும் படியாக வேண்டிக் கொள்ளுகிறேன். கர்த்தருக்கு ஒரு மனிதனின் ஒப்புக்கொடாத வாழ்க்கை மிகவும் கடினமானதாக, இஸ்ரவேல் ஜனங்களைப் போன்று முணுமுணுப்பும், முறுமுறுப்பும் காணப்படும். கர்த்தருடைய பிள்ளைகளுக்கு கர்த்தரே சகலத்தையும் ஆளுகை செய்கிறவராக, தீர்மானிக்கிறவராக,  நடத்துகிறவராக இருக்கிறார் என்ற உறுதித்தன்மை காணப்படும். கர்த்தருடைய பிள்ளைகளின் வாழ்க்கையிலே ஒவ்வொரு சிறிய காரியமும், நன்மைக்காகவே தீர்மானித்து வழிநடத்துகிறார். இந்த சிற்றேட்டின் மூலமாக உங்கள் முன் ஆறு காரியங்களை வைக்கிறேன், ஏன் நாம் கெம்பீரமான சத்தத்துடன் கர்த்தரைப் புகழ்ந்து பாடவேண்டும் என்பதை உங்களுக்கு உணர்த்துவிக்கும் படியாக விரும்புகிறேன். 

 

தேவனைத் துதியுங்கள்(PDF) – Click to Download