“நாதாபும் அபியூவும் கர்த்தருடைய சந்நிதியில் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்தபோது, செத்துப்போனார்கள்” (எண்ணாகமம் 26:61).

நம்முடைய வாழ்க்கையில் கர்த்தருடைய சமூகத்தில் அவரை எவ்விதம் கிட்டிச்சேருகிறோம் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் வழிகாட்டியாக தேவன் வேதத்தை வைத்திருக்கிறார். வேதத்திற்குப் புறம்பான காரியங்களை நாம் தேவனுடைய சமூகத்தில் கொண்டுவரக் கூடாது. நாதாபும் அபியூவும் துணிகரமாய் அந்நிய அக்கினியைக் கர்த்தரின் சந்நிதியில் எடுத்துக்கொண்டு போனதின் விளைவை நாம் பார்க்கிறோம். கர்த்தருடைய சமூகத்தில் பயத்தோடும் நடுக்கத்தோடும் நடக்க வேண்டியது அவசியம். வேதத்தில் சொல்லப்படாத காரியத்தை நாம் செய்யத் துணிவது ஆபத்தானது. அநேக பிரசங்கிகள் சபைகளில் அந்நிய அக்கினியைக் கொண்டுவருகிறார்கள். தேவனுக்குப் பயப்படாதபடிக்கு செய்யக்கூடிய பல காரியங்கள் இன்றைக்குச் சபைகளில் நுழைந்திருக்கிறதை நாம் பார்க்கிறோம். இவைகள் அந்நிய அக்கினி. அவ்விதமாய் நாம் செய்யும்பொழுது கர்த்தருக்கு அருவருப்பாய் காணப்படுகிறோம். ஆகவே நம்முடைய சொந்த வாழ்க்கையிலும் சபையிலும் ஆவிக்குரியக் காரியங்கள் எல்லாவற்றிலும், இந்த வேதம் சொல்லுகிற காரியங்களை மாத்திரமே நாம் ஏற்றுக்கொள்ளவும், அதற்குப் புறம்பான காரியங்களை விலக்கிப்போடவும் ஜாக்கிரதைதையாக இருப்போம். நம்முடைய வாழ்க்கை விலையேறப்பெற்றது. தேவனுடைய காரியங்களில் நாம் பயபக்தியாய் எப்பொழுதும் காணப்படுவோம். நம் முடியாமையின் மத்தியில் அவரைச் சார்ந்து கொள்ளும்போது கர்த்தர் நமக்கு உதவி செய்வார். தேவனுடைய வார்த்தைக்குப் புறம்பாக நாம் செயல்படாதபடிக்கு கர்த்தர் நம்மைக் காத்துக்கொள்வாராக.